YouTurn

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று பரவும் AI புகைப்படம்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று பரவும் AI புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று குறிப்பிட்டு பரவும் இந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள "பாரசீக பாலம் என்று அழைக்கப்படும் பாலம்  மனதைக் கவரக்கூடிய கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பு உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றான ஈரான் மாலின் ஒரு பகுதியாகும், இது தெஹ்ரானில் அமைந்துள்ளது.

இந்தப் பாலத்தில் பண்டைய பாரசீக வீரர்களை குதிரையில் சவாரி செய்வதை சித்தரிக்கும் பிரமாண்டமான சிலைகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன, இது ஈரானின் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

பூரியா ஜமானியால் உருவாக்கப்பட்ட இந்த வடிவமைப்பு, ஈரானிய சின்னங்களையும் வரலாற்றையும் நகர்ப்புற திட்டமிடலில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குடிமக்கள் மற்றும் கலாச்சார அடையாளத்திற்கான மரியாதையை வலியுறுத்துகிறது.

இந்த சிலைகள் நவீன நகர்ப்புறத்திற்குள் ஒரு முக்கிய அடையாளமாகவும் பாரசீக வரலாற்றின் காட்சி பிரதிநிதித்துவமாகவும் செயல்படுகின்றன.

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

ஈரானின் தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலத்தில் பண்டைய பாரசீக வீரர்கள் குதிரையில் சவாரி செய்வதை சித்தரிக்கும் பிரம்மாண்ட சிலைகள் வரிசையாக இடம்பெற்றுள்ளதாகவும், இது ஈரானின் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Iran Photos என்ற முகநூல் பக்கத்தில், ஜூன் 11, 2025 அன்று இதே புகைப்படம் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அந்த புகைப்படத்தின் caption-ல் "AI design. Legends of Persia bridge" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது உண்மையா என்பதை அறிய, பரவி வரும் புகைப்படத்தை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இது 72.9% AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியானது. 


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : கமல்ஹாசன் இஸ்லாமியர்களைப் போல் தொப்பி அணிந்துகொண்டு பிரியாணி உண்ணுபது போன்று பரவும் புகைப்படம் போலியானது.


இந்தியாவில் ராமர் புகைப்படத்துடன் ரயில்கள் எனப் பரவும் AI புகைப்படங்கள்!


முடிவு : 

எனவே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பாரசீக பாலம் என்று குறிப்பிட்டு பரவும் இந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க