YouTurn

'கடல் பசுவைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்' எனப் பரவும் போலியான வீடியோ!

'கடல் பசுவைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்' எனப் பரவும் போலியான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடல் பசுவைப் போலவே, விசித்திரமான உருவம் கொண்ட மாடு மற்றும் புலியின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

பரவிய செய்தி

கடல் பசு...இதை பார்க்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்..



விரிவான விளக்கம்

'கடல் பசு இதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று கூறி 13 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வாட்சாப் உட்பட அனைத்து சமூக ஊடகப் பக்கங்களிலும் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 


அதில் தரையில் படுத்திருக்கும் அந்த விசித்திரமான உயிரினத்தின் மேல் பாதி உருவம் பசுவையும், கீழ் பாதி உருவம் மீனையும் ஒத்திருப்பதைப் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. அந்த உயிரினத்தை சுற்றி பலர் நின்று கொண்டு வேடிக்கைப் பார்ப்பையும், வீடியோவில் காணமுடிகிறது.

உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இதே போன்று விசித்திரமான தோற்றம் கொண்ட புலி மற்றும் மாட்டின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன என்பதை அறியமுடிந்தது. 



'Arojinle' என்ற வனவிலங்கு ஆராய்ச்சியாளரின் எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோக்கள் பதிவுசெய்யப்பட்டு, இவை போலியாக உருவாக்கப்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. 



எனவே இவை போலியாக AI மூலம் உருவாக்கப்பட்டவையா தானா என்பது குறித்து அறிய, ‘Hugging face’ இணையதளத்தில் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை பதிவேற்றி ஆய்வுசெய்து பார்த்தோம். இவை 92% போலியானவை (Artificial) என்பதை ஆய்வின் முடிவுகள் நமக்கு உறுதி செய்தன.





மேலும் ஆய்வு செய்ததில், ‘Mina Rajbunshi’ என்ற Digital Creator-ன் ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் வீடியோக்களைப் போன்றே AI மூலம் போலியாக உருவாக்கப்பட்ட பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீடியோக்களை உருவாக்கியது யார் என்பது குறித்த விவரங்கள் நமக்கு கிடைக்கவில்லை.




பரவி வரும் வீடியோக்களில் சுற்றி மனிதர்கள் நிற்பது போன்று காட்டப்பட்டிருந்தும், இத்தகைய விசித்திர உயிரினங்கள் உண்மையில் இருந்திருந்தால், இந்நேரம் இவைக் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பல்வேறு ஊடகங்களிலும் வந்திருக்கும். ஆனால் கடல் பசு குறித்தோ, விசித்திர புலி குறித்தோ எந்த செய்தி ஊடகத்திலும் இதுவரை செய்தி வெளியாகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:  சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆர்கானிக் ரயில் செய்து அசத்திய மதுரை பாட்டி எனப் பரவும் நையாண்டிப் பதிவு!


முடிவு:

நம் தேடலில், கடல் பசுவைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்கள் போலியானவை என்பது தெளிவாகிறது. 





பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க