YouTurn

பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்தியா தாக்கியதா? உண்மை என்ன?

பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்தியா தாக்கியதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை. இதனை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானம்.. இந்தியா விளையாடிய பிறகு உள்ள காட்சி..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானில் 4 இடங்களிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 


இந்நிலையில், ‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. பரவி வரும் புகைப்படத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று சிதைந்து கிடப்பதைக் காண முடிகிறது.




உண்மை என்ன?


‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானம் என்று கூறி பரவி வரும் புகைப்படங்களை ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


மேலும் பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, “Hive Moderation” இணையதளத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் "இது 

92.6% AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது" என்பதை அறிய முடிந்தது. 



மேலும் இதனை உறுதி செய்ய, “Aiornot “ என்ற இணையதளத்திலும் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம். இதன் மூலம் பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது. 



முடிவு: 


நம் தேடலில்,  ‘பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தை தாக்கிய இந்தியா’ என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் போலியானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க