YouTurn

ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட Pampers என்று பரப்பப்படும் News Card! உண்மை என்ன?

ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட Pampers என்று பரப்பப்படும் News Card! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட பொய்யான News Card இது.

பரவிய செய்தி

சென்னை : கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் புகைப்படம் பொறித்த Pampers-ளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்னர். 


Instagram Link



X Link / Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்கள் ஆகியவற்றை சோதனை செய்து வருகிறார்கள்.


இந்நிலையில்,  திமுக தலைவர் ஸ்டாலின் படம் அச்சடிக்கப்பட்ட குழந்தைகள் அணியும் பேம்பர்ஸை சென்னை கெளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், அதனை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியதாகவும் News Card ஒன்றை அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.




உண்மை என்ன?


முதலில் இது குறித்து இணையத்தில் தேடியபோது, இது போன்ற செய்தி எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை என்பதை காண்கிறோம். மேலும் பரப்பப்படும் இந்த News Card-ல் ‘Sun News’ செய்தி ஊடகத்தின் Template பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதில் ‘Saturn News’ என்று எழுதப்பட்டிருப்பதை காணமுடிகிறது. 



மேலும் பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Hive Moderation’ என்ற தளத்தில் சோதனை செய்தபோது, இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. 


இது போன்று, செய்தி ஊடகங்களின் பெயரையும், அதன் Template-களையும் போலியாக பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் உருவாக்கப்பட்ட பொய் கணக்குகளில் இருந்து, போலியான செய்திகள் பரப்பப்படுவது குறித்து நமது ’You Turn’ தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம். 


முடிவு:


செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட பொய்யான News Card-ஐ அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சியினர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க