YouTurn

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 ஆண்டுகள் கழித்து ஹோலி கொண்டாடப்பட்டதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை.

உத்திரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 ஆண்டுகள் கழித்து ஹோலி கொண்டாடப்பட்டதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சம்பல் நகரின் KHAGGU SARAI பகுதியில் உள்ள பழமையான கார்த்திக் மகாதேவ் கோயிலில் ஹோலி கொண்டாடப்பட்ட காட்சி என்பது தெரியவந்துள்ளது.

பரவிய செய்தி

உத்திரபிரதேசம்,சம்பல் நகரில் 46 வருடங்கள் கழித்து ஹோலி கொண்டாடப்பட்டது. யோசித்துப்பாருங்கள் சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை இன மக்கள் தங்கள் மதவிழாவை கொண்டாட 46 வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை சாதித்துக் காட்ட ஒரு மோடி, ஒரு யோகி, சம்பல் எஸ்.பி என பலர் தேவைப்பட்டுள்ளனர்.


image.png

X Link | Archive Link

விரிவான விளக்கம்

சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், மக்களிடையே மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வதற்காகவும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டிற்கான ஹோலி பண்டிகை கடந்த மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. 


அப்போது உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 வருடங்கள் கழித்து ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாகவும், சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை இன மக்கள் தங்களது மதவிழாவை கொண்டாட 46 வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.


உண்மை என்ன ?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது HINDUSTAN TIMES இணையதள பக்கத்தில் இது குறித்து செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் 46 வருடங்கள் கழித்து சம்பல் நகரின் KHAGGU SARAI பகுதியில் உள்ள பழமையான கார்த்திக் மகாதேவ் கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


மேலும் இது குறித்து தேடி பார்த்ததில், INDIA TODAY ஊடகத்தின் இணையதள பக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற மத கலவரத்தால் கார்த்திக் மகாதேவ் கோயில் மூடப்பட்டதாகவும், 46 வருடங்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. அதே போல் ETV BHARAT இணையதள பக்கத்தில், கார்த்திக் மகாதேவ் கோயில் கடந்தாண்டு டிசம்பர் 14ஆம் தேதி திறக்கப்பட்டதாகவும், புதிப்பிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஜனவரி 7ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. 

image.png


இதற்கு முன்பு சம்பல் நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளதா என்று தேடி பார்க்கையில், NYOOZ UP - UTTARAKHAND என்ற யூடியூப் பக்கத்தில் 2018ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி சம்பல் நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டதாக வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதே போல் ZEE 24 KALAK என்ற செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், 'UP : Stage collapsed in Sambhal during BJP Holi Milan Program' என்ற தலைப்பில் 2019ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

Archive

முடிவு


இதன்படி பார்க்கையில் உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் 46 வருடங்கள் கழித்து ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. கடந்த ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தின் சம்பல் நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது உறுதியானது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.