யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
வழக்கறிஞர் பால் கனகராஜ் என்பவர் ஜாபர் சாதிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியே எடுக்கும் போது அவர் திமுகவில் இருந்தார்! - சவுக்கு சங்கர்

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
டெல்லி குடோன் ஒன்றில் கடந்த 15 ஆம் தேதி போலீஸார் நடத்திய சோதனையில் 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், பல்வேறு நாடுகளுக்கும் போதைப் பொருள் கடத்தியது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மார்ச் 09 அன்று கைது செய்தனர். இதனையடுத்து இவர் திமுகவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள சவுக்கு சங்கர், "வழக்கறிஞர் பால் கனகராஜ் என்பவர் ஜாபர் சாதிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியே எடுக்கும் போது அவர் திமுகவில் இருந்தார்" என்று கூறியுள்ளது, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில் குற்றவியல் வழக்கறிஞரான பால் கனகராஜ், சென்னை வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவராகவும், திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளதையும் அறிய முடிந்தது.
ஜாபர் சாதிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியே எடுக்கும் போது பால் கனகராஜ் திமுகவில் தான் இருந்தார் என்று சவுக்கு சங்கர் கூறியது தொடர்பாக தேடியதில், கடந்த 2014 பிப்ரவரி 19 அன்று India Today பால் கனகராஜ் தொடர்பாக வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று கிடைத்தது. அதில் "கனகராஜ் பிப்ரவரி 2009 வரை திமுகவில் உறுப்பினராக இருந்தார். பிப்ரவரி 19, 2009 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர் கட்சியில் இருந்து விலகினார்.
இந்த மோதல்களில் பல வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர் மற்றும் ஒரு நீதிபதியும் போலீஸின் லத்தி சார்ஜ்க்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்த கனகராஜ், அக்கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவில் தீவிரமாக செயல்பட்டார். ஆனால் டிஜிபி அலுவலகத்தில் வக்கீல்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பிரச்சனையில் சலசலப்பை ஏற்படுத்தியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தமிழ் மாநிலக் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கிய இவர், கடந்த 2020 இல் இருந்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: போதை மருந்து கடத்தியவர் தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குவதாகச் சவுக்கு சங்கர் பரப்பும் பொய்!
மேலும் படிக்க: 2001ல் கலைஞரை கைது செய்த போது மு.க.ஸ்டாலின் தலைமறைவாக இருந்ததாக சவுக்கு சங்கர் பரப்பிய பொய் !
முடிவு:
நம் தேடலில், ஜாபர் சாதிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியே எடுக்கும் போது பால் கனகராஜ் திமுகவில் தான் இருந்தார் என்று சவுக்கு சங்கர் கூறிய தகவல்கள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
எத தின்னா பித்தம் தெளியும் னு அலையும் பித்தலாட்ட கொத்தடிமைகளே
வழக்கறிஞர் பால் கனகராஜ் என்பவர் ஜாபர் சாதிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியே எடுக்கும் போது அவர் திமுகவில் இருந்தார்! டா டுமான்கோழி ஸ் #Drug_Mafia_DMK #SayNoToDrugs_SayNoToDMK pic.twitter.com/viTr1wXaXw
— Mr.Siva (@007Mr_Siva) March 11, 2024
இந்நிலையில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள சவுக்கு சங்கர், "வழக்கறிஞர் பால் கனகராஜ் என்பவர் ஜாபர் சாதிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியே எடுக்கும் போது அவர் திமுகவில் இருந்தார்" என்று கூறியுள்ளது, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
வழக்கறிஞர் பால் கனகராஜ் என்பவர் ஜாபர் சாதிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியே எடுக்கும் போது திமுகவில் இருந்தார்! pic.twitter.com/C12jQ6V4eI
— . -Say No To Drugs & DMK (@GMuruganAIADMK) March 11, 2024