யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ABP வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 172-179 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், Times Now வெளியிட்டுள்ள ‘Inside Election’ கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 165 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளனர். மேலும் Democracy Times, புதிய தலைமுறை மற்றும் விகடன் போன்றவை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து எந்த கருத்துக்கணிப்பையும் வெளியிடவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ABP, Times Now, புதிய தலைமுறை, விகடன், Democracy Times, தந்தி டிவி ஊடகங்கள் நடத்திய கருத்துகணிப்பில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று முடிவு வந்துள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எல்லா கருத்துகணிப்புகளும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றே சொல்கிறது
உங்கள் ஓட்டை வெற்றி பெற உள்ளவர்களுக்கு அளியுங்கள்
உங்கள் தொகுதி ஆளும் கட்சி தொகுதியாக இருந்தால் மக்கள் நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்கும்
சிந்திப்பீர் வாக்களிப்பீர் !
திமுக வை வீட்டுக்கு அனுப்புவோம். pic.twitter.com/IzkI2QWj1P
உண்மை என்ன?
மேலே குறிப்பிட்டுள்ள ஊடகங்கள் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். முதலில் ABP ஊடகம் வெளியிட்ட கருத்தக்கணிப்பை தேடிப் பார்த்தோம். அப்போது ஏப்ரல் 09, 2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 மொத்த தொகுதிகள் 234 கருத்துக்கணிப்பு முடிவுகள் என்று குறிப்பிட்டு வெளியிட்டுருந்தது. அதில் திமுக கூட்டணி 172-179 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 50-58 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Times Now வெளியிட்ட கருத்துக்கணிப்பு குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது Times Now ஊடகம் தனியாக எந்த கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை என்பது தெரியவந்தது. மாறாக Inside Election நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுருந்தது. அதிலும் திமுக கூட்டணி 159-165 தொகுதிகளில் வெற்றி பெற்று 44% வாக்குகளை பெறும் என்றும், அதிமுக கூட்டணி 64-70 வெற்றி பெற்று 28% வாக்குகளை பெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Inside Election Survey Shows:
Tamil Nadu (Total Seats: 234) | Projected Seat Share:
- DMK+: 159-165
- NDA: 64-70
- TVK: 4-6
- NTK: 0
- Oth: 0 pic.twitter.com/FuKt9swv61
இதையடுத்து புதிய தலைமுறை, விகடன், Democracy Times, தந்தி டிவி ஊடகங்கள் நடத்திய கருத்துகணிப்பை தேடிப் பார்த்தோம். ஆனால் இந்த ஊடகங்கள் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து எந்த கருத்துக்கணிப்பையும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, ABP, Times Now ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் Democracy Times, புதிய தலைமுறை மற்றும் விகடன் போன்றவை 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து எந்த கருத்துக்கணிப்பையும் வெளியிடவில்லை. எனவே ஊடகங்கள் நடத்திய கருத்துகணிப்பில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி என்று பரவும் புகைப்படம் போலியானது.
