YouTurn

‘விபூதியை அழித்த பங்காளி கட்சி’ என அதிமுக குறித்துப் பொய் சொன்ன அண்ணாமலை!

‘விபூதியை அழித்த பங்காளி கட்சி’ என அதிமுக குறித்துப் பொய் சொன்ன அண்ணாமலை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

"விபூதியை அழித்த பங்காளி கட்சி" இதுநாள் வரை திருநீர் வைத்து வந்த, பங்காளி கட்சியை சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் சமீப நாட்களாக திருநீரை அழித்துவிட்டு வருகின்றனர். - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

X link 

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை விட்டு விலகுவதாக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றியும் அதன் முன்னாள் இந்நாள் தலைவர்கள் பற்றியும் பல்வேறு மேடைகளில் விமர்சித்துப் பேசி வருகிறார். 



இந்நிலையில் ‘விபூதியை அழித்த பங்காளி கட்சி’ என்ற தலைப்பில் சாணக்கியா ஒரு நியூஸ் கார்டினை வெளியிட்டுள்ளது. அந்த கார்டில் ‘யார் ஒருவன் உண்மையான ஹிந்துவாக இருக்கிறானோ அவன் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நண்பனாக இருப்பான். அதற்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம். இதுநாள் வரை திருநீர் வைத்து வந்த, பங்காளி கட்சியை சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் சமீப நாட்களாக திருநீரை அழித்துவிட்டு வருகின்றனர். இப்படி போலி மதசார்பின்மையுடன் இருக்கும் தலைவர்கள் அந்த மதத்திற்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் சிறுபான்மையினருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள். - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்’ என்றுள்ளது. மேலும் அதில் எடப்பாடி பழனிச்சாமி படம் உள்ளது. 



விழுப்புரத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேசுகையில் அதிமுக என்றோ எடப்பாடி பழனிசாமி என்றோ குறிப்பிடவில்லை. ஆனால், பங்காளி கட்சி என்று கூறியதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்துடன் சாணக்கியா நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது. 

உண்மை என்ன ?

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு எடப்பாடி பழனிசாமி நெற்றியில் திருநீறு வைப்பது கிடையாதா? என்பதை ஆராய அவர் கலந்து கொண்ட சமீபத்திய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோக்களை பார்த்தோம். 

கடந்த (ஜனவரி) 7ம் தேதி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பில் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ மதுரையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசிய முழு வீடியோ ‘நியூஸ் ஜெ’ யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில் அவரது நெற்றியில் திருநீறு உள்ளது. 



அதேபோல் 27ம் தேதி நாடார் மகாஜன சங்க 72வது மாநில மாநாட்டில் கலந்து கொண்ட செய்திகளிலும் அவரது நெற்றியில் திருநீறு உள்ளது



அவர் மட்டுமின்றி அதிமுக-வின் முக்கிய பொறுப்பாளர்களும் எப்போதும் போல நெற்றியில் பொட்டுக்களுடனே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 26ம் தேதி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வீடியோவில் அவரது நெற்றியில் பொட்டு உள்ளது. 

SDPI நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் வேலுமணி நெற்றியிலும் திருநீறும், குங்குமமும் உள்ளது. 



இவற்றில் இருந்து எடப்பாடி பழனிசாமியும் அதிமுக கட்சி முக்கிய பொறுப்பாளர்களும் எப்போதும் போல் நெற்றியில் பொட்டுடன்தான்  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.  

மேலும் படிக்க : எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் வாக்கிற்காக நெற்றியில் திருநீறு வைப்பதில்லை எனப் பரவும் பழைய படங்கள் !

இதற்கு முன்னர் பாஜக ஆதரவாளர்கள் இதே பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். தற்போது அதனை அக்கட்சி மாநில தலைவரும் மேடையில் பேசி வருகிறார். 

முடிவு: 

எடப்பாடி பழனிசாமியும் அதிமுக கட்சி முக்கிய பொறுப்பாளர்களும் விபூதியை அழித்து விட்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக அண்ணாமலை கூறும் தகவல் உண்மை அல்ல. அவர்கள் எப்போதும் போல நெற்றியில் விபூதியுடன் தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க