யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?
பரவிய செய்தி
காசுக்கு அழைத்து வரப்படும் கூட்டம். எடப்பாடி புலம்புவதை கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்களோடு கலந்து நின்று "கேட்பது போல நடித்து விட்டு" கலைந்து போகிறது. "பச்சை" ஆம்னி பஸ்ஸை தவிர பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரஸ்யம் ஏதுமில்லாத இந்த பழனிச்சாமியின் "பண விநியோக" பயணத்தால் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை..
விரிவான விளக்கம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்ததாக வீடியோ ஒன்று ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#பட்டுவாடாபஸ்
காசுக்கு அழைத்து வரப்படும் கூட்டம்
எடப்பாடி புலம்புவதை
கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்களோடு கலந்து நின்று "கேட்பது போல
நடித்து விட்டு" கலைந்து போகிறது.
"பச்சை" ஆம்னி பஸ்ஸை தவிர பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரஸ்யம் ஏதுமில்லாத இந்த பழனிச்சாமியின்
"பண விநியோக"… pic.twitter.com/uJSxKyjR8a
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது புதிய தலைமுறை ஊடகத்தில் நவம்பர் 29, 2025 அன்று பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் திருப்பூரில் திமுக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது என்றும், இது தொடர்பான வீடியோ வைரலாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருப்பூர் : திமுக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு பணப் பட்டுவாடா - வைரலாகும் வீடியோ!
#Tiruppur | #DMK | #Money pic.twitter.com/W5QPK5zJZg
இது குறித்து மேலும் தேடிய போது, News Tamil 24x7 ஊடக்கத்திலும் நவம்பர் 29, 2025 அன்று பரவி வரும் இதே வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திமுக பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்த வீடியோ வைரலாகி வருகிறது என்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததை பார்க்கமுடிந்தது.
முடிவு:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்ததாக பரவி வரும் வீடியோ தவறானவை. இது நவம்பர் 29, 2025 அன்று திமுக கூட்டத்தில் பணம் பட்டுவாடா செய்யபபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.