யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவர் தலையை பின்புறம் சாய்த்துவிட்டு, மீண்டும் பழைய நிலையிலேயே அமர்கிறார். அவர் தலையை பின்புறம் சாய்க்கும் வீடியோ காட்சியை மட்டும் குறிப்பிட்டு தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூங்கி விட்டதாக, அதிமுக ஐடி விங் புகைப்படம் ஒன்றை பரப்பி வருகின்றனர்.
இரவினில் ஆட்டம்....
பகலினில் தூக்கம்.....
Hence Proved!@Udhaystalin... #DMKFailsTN
#மாபெரும்_காதுகுத்தும்_விழா pic.twitter.com/KWbqcSUrZK
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து எங்களது ஆய்வினை தொடங்கினோம். அந்த புகைப்படத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைவரும் பச்சை நிறத் துண்டு அணிந்திருந்ததை பார்க்கமுடிந்தது. எனவே இது தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து வேளாண் பட்ஜெட் நடைபெற்ற முழு வீடியோவையும் ஊடகங்களில் தேடினோம். அப்போது தந்தி டிவி ஊடகத்தில், ”LIVE : TN Budget 2026 Live | TN Agriculture Budget” என்ற தலைப்பில் 1 மணிநேரம் 10 நிமிடம் கொண்ட முழுவீடியோவும் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.
அதில் பரவி வரும் புகைப்படத்தில் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்பதை தேடினோம். அப்போது சரியாக 1:56வது நொடியில், அந்த காட்சி இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவர் தலையை பின்புறம் சாய்த்துவிட்டு, மீண்டும் பழைய நிலையிலேயே அமர்வதை தெளிவாக பார்க்கமுடிந்தது. அதே போல் பட்ஜெட் முடியும் வரையிலும், அவர் தூங்கியது போன்ற காட்சிகள் எங்கும் இல்லை என்பதையும் பார்க்கமுடிந்தது.
முடிவு:
எனவே, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலையை பின்புறம் சாய்த்துவிட்டு, மீண்டும் பழைய நிலையிலேயே அமர்கிறார். அவர் தலையை பின்புறம் சாய்க்கும் வீடியோ காட்சியை மட்டும் குறிப்பிட்டு, சட்டமன்றத்தில் தூங்கி விட்டதாக அதிமுக ஐடி விங் தவறாகப் பரப்புகின்றனர்.
