YouTurn

நொறுக்குத்தீனி, உணவு இடைவேளையுடன் களைகட்டிய அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

நொறுக்குத்தீனி, உணவு இடைவேளையுடன் களைகட்டிய அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

அட வெக்கங் கெட்டவங்களா இதுக்கு எதுக்கு டா உண்ணாவிரத நாடகம்..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், விஷச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை செய்ய கோரியும் அதிமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உணவு மற்றும் நொறுக்குத்தீனி சாப்பிட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

பரவி வரும் வீடியோவில், "நொறுக்குத்தீனி, உணவு இடைவேளை மற்றும் நடனத்துடன் அதிமுகவின் உண்ணாவிரதம் களைகட்டியது. நொறுக்குத்தீனியுடன் உண்ணாவிரதத்தை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் உணர்ச்சிமிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியது" என்று கூறப்படுவதையும் கேட்க முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், வீடியோவின் மேல் பாதியில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் சமீபத்தில் ஜூன் 27ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் எடுக்கப்பட்டதுதான் என்பதை உறுதிசெய்ய முடிந்தது.



அதேசமயம் பரவி வரும் வீடியோவில் கீழே காட்டப்பட்டுள்ள வீடியோ குறித்து தேடியதில், கடந்த 2018 ஏப்ரல் 06ஆம் தேதி அன்று, தினமலர் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் "AIADMK hunger strike Troll : உண்ணும் விரதம் : வைரல் போட்டோஸ் | Admk hunger strike drama" என்று குறிப்பிட்டு செய்தியாக வெளியிடப்ப்ட்டிருந்தது. இதில் பரவி வரும் வீடியோவின் காட்சிகள் அப்படியே பொருந்தின.



இதன்மூலம் கடந்த 2018ஆம் ஆண்டில் தினமலர் அதிமுகவின் அப்போதைய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து நையாண்டியாக வெளியிட்டிருந்த வீடியோவை, சமீபத்தில் நடைபெற்ற அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை எதிர்த்து திமுகவினரே போராட்டம் நடத்துவதாக பரவும் 2020ம் ஆண்டு செய்தி!

மேலும் படிக்க: பிபிசியின் மோடி ஆவணப்படத்திற்கு எதிராக பிரிட்டன் மக்கள் போராட்டம் எனப் பரவும் தவறான வீடியோ !

முடிவு:

நம் தேடலில், அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் உணவுகள் வழங்கப்பட்டதாகப் பரவும் வீடியோ, கடந்த 2018ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க