YouTurn

அதிமுக கொடியுடன் இருக்கும் வடமாநிலத்தவர்கள் புகைப்படம்.. சென்னை பேரணியில் எடுக்கப்பட்டதா ?

அதிமுக கொடியுடன் இருக்கும் வடமாநிலத்தவர்கள் புகைப்படம்.. சென்னை பேரணியில் எடுக்கப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

அடிக்கற வெய்யிலுக்கு நம்ம ஊர்க்காரர்கள் வரலைன்னு வடநாட்டுத் தொழிலாளர்களைக் கூட்டி வந்து பேரணி நடத்தியிருக்கிறார் எடப்பாடி.
Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரண விவகாரம், சட்டம்-ஒழுங்கு மற்றும் திமுக அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கைக் கோரி ஆளுநரிடம் மனு அளிக்க மே 22ம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது. அதிமுகவினரின் பேரணியால் கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் காத்திருந்த சம்பவம் பரபரப்பையும், கண்டனத்தையும் பெற்றது.

இந்நிலையில், அதிமுகவின் பேரணியில் கலந்து கொள்ள வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்ததாக இப்புகைப்படத்தை திமுகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.





உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் Niranjan என்ற பெயர் வாட்டர் மார்க் உள்ளதை பார்க்க முடிந்தது. புதியதலைமுறை சேனலின் டெல்லி செய்திகளுக்கான நிருபர் நிரஞ்சன் குமார் கடந்த 2022ம் ஜூலை மாதம் இந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link

அதில், " குடியரசு தலைவர் வழியனுப்பும் விருந்தில் கலந்துகொள்ள டெல்லி வரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்க காத்திருக்கும் அதிமுகவின் டெல்லி தொண்டர்கள் இடம்: தமிழ்நாடு புது இல்லம், டெல்லி " என இடம்பெற்று இருக்கிறது.



Twitter link | Archive link

இதேபோல், எடப்பாடி பழனிசாமி வரும் போது அதிமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோவையும் நிரஞ்சன் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.



அதிமுகவின் சென்னை பேரணியில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உள்ளனர். பேரணியின் முழு நேரலையானது செய்தி ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், சென்னையில் அதிமுகவினர் நடத்திய பேரணிக்கு வடமாநிலத்தவர்களை அழைத்து வந்ததாகப் பரப்பப்படும் புகைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல. இப்புகைப்படம் 2022ல் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற போது அங்கு வரவேற்பு அளிக்க அழைத்து வரப்பட்டவர்கள் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க