யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இன்று புஸ்ஸி ஆனந்துடன் டெல்லி சென்றிருப்பவர் தான் விஜய்யின் தற்போதைய அரசியல் ஆலோசகராக இருக்கும் பிரகாஷ் சுவாமி. ஆர்.எஸ்.எஸ் புரோக்கர்களில் முதன்மையானர். இவர் மீது நடிகை காயத்திரி பாலியல் புகார் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு. வாழ்த்துகள் ண்ணா..
X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
'விஜய் மக்கள் இயக்கம்' பெயரில் நிவாரண உதவிகளையும், மக்கள் நலத்திட்ட பணிகளையும் செய்து வந்த நடிகர் விஜய், இன்று "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வதற்காக சென்ற புஸ்ஸி ஆனந்த் உடன் இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த பிரகாஷ் எம் சாமி எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Archive Link:

Archive Link:
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், புஸ்ஸி ஆனந்த் உடன் டெல்லியில் இருப்பவர் பாஜக ஆதரவாளர் பிரகாஷ் எம் சாமி அல்ல என்பதை அறிய முடிந்தது.
இதுகுறித்து "விஜய் கட்சி ஆரம்பித்ததும் புஸ்ஸி ஆனந்த் பேச்சில் தெரிந்த திடீர் மாற்றம்" என்ற தலைப்பில் தந்தி டிவி இன்று வெளியிட்டிருந்த வீடியோவில் புஸ்ஸி ஆனந்துக்கு அருகில் அந்த வழக்கறிஞரின் முகம் தெளிவாக தெரிகிறது.
இதே போன்று நடிகர் விஜய் தூத்துக்குடிக்கு வந்தது குறித்து புதியதலைமுறை கடந்த டிசம்பர் 30 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் தூத்துக்குடி விமானநிலையத்திலிருந்து விஜய் வெளியே வரும் போது, விஜய்க்கு அருகில் அதே வழக்கறிஞர் இருப்பதை காண முடிந்தது.
மேலும் பிரகாஷ் எம் சாமி பேசிய குறித்து தேடுகையில், பிரகாஷ் எம் சாமி மற்றும் வழக்கறிஞர் இருவரும் வெவ்வேறு நபர்கள் என்பதை அறிய முடிந்தது. வைரல் படத்தில் இருப்பவர் விஜயின் வழக்கறிஞர் என்றும், அவரின் பெயர் வெங்கட்ராமன் என விஜய் ஆதரவு எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விஜய் தரப்பு வழக்கறிஞரையே பிரகாஷ் எம் சாமி எனக் கூறி சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:
நம் தேடலில், புஸ்ஸி ஆனந்துடன் டெல்லியில் இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த பிரகாஷ் எம் சாமி எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.