யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீபத்தில் படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற நடிகர் விஜய், அங்கு தன்னை காண ரசிகர்கள் சூழ்ந்தததால் அவர்களை சந்திப்பு பேசினார். இந்நிலையில் அவர் வரிசையாக ரசிகர்களை சந்தித்து வந்த போது, விஜய்க்கு ஸ்வீட் ஊட்டி விட்ட ரசிகர் ஒருவர், அவரை வலுக்கட்டாயமாக முத்த கொடுக்க முயன்றதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர் ரசிகர்களை வரிசையாக சென்று சந்திப்பது போன்று எந்த வீடியோவும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. மாறாக அவர் வண்டியின் மேல் ஏறி ரசிகர்களை சந்திப்பது போன்றும், ரசிகர்கர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்றுமே வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தன.
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களையும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், பரவி வரும் வீடியோவின் முழு வீடியோவைக் காண முடிந்தது. Namma KFI என்ற யூடியூப் பக்கத்தில் ஜனவரி 20 அன்று "ரசிகர் துனியா விஜய்யை இழுத்து முத்தமிட்ட போது | துனியா விஜய் பிறந்தநாள் | பீமா திரைப்படம் | துனியா விஜி மனைவி" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில் வீடியோவின் 49 வது வினாடியில் கன்னட நடிகரான துனியா விஜய்யை (Duniya Vijay), ரசிகர் ஒருவர் முத்தம் கொடுக்க முயல்வதை தெளிவாகக் காண முடிகிறது. இதன் மூலம் கன்னட நடிகர் துனியா விஜய்யின் வீடியோவை, நடிகர் விஜய் கேரளாவில் ரசிகர்களை சந்தித்த வீடியோவோடு தொடர்புபடுத்தி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: வெற்றி துரைசாமியின் இறுதி அஞ்சலிக்கு செல்லாமல் வேறு நிகழ்ச்சிக்கு சென்ற நடிகர் விஜய் எனப் பரவும் பழைய வீடியோ !
மேலும் படிக்க: ‘விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்’ என அரவிந்த்சாமி கூறியதாக மாலை மலர் வெளியிட்ட தவறான செய்தி!
முடிவு:
நம் தேடலில் கன்னடநடிகர் துனியாவிஜய் பிறந்தநாளின் போது, ரசிகர் ஒருவர் முத்தம் கொடுக்க முயன்ற போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, நடிகர் விஜய் கேரளாவில் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
என்னடா இது வருங்கால முதல்வருக்கு வந்த சோதனை.
மவுத் கிஸ் லாம் அடிக்கீறீங்க!. இதே திரிஷா வா இருந்தா தளபதி கிஸ் அடிச்சுருப்பாரு.
மெண்டாலன் ரசிகர் கள் எவ்ளோவோ தேவலாம் போல. @tvkvijayhq @actorvijay @rajinikanth pic.twitter.com/5G1VaUTZk8
— டாக்டர். Ghost, PhD ( திராவிடக் குடும்பம்) (@GhostdrPhd) March 23, 2024
என்னடா தளபதி வாய்ல தினிச்சு கிஸ் அடிச்சுட்டு இருக்கிங்க
https://t.co/VJZCoB9Yd6
— (@AjithBruceOffl) March 23, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர் ரசிகர்களை வரிசையாக சென்று சந்திப்பது போன்று எந்த வீடியோவும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. மாறாக அவர் வண்டியின் மேல் ஏறி ரசிகர்களை சந்திப்பது போன்றும், ரசிகர்கர்களுடன் செல்ஃபி எடுப்பது போன்றுமே வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தன.
Ente Aniyathimaar , aniyanmaar, chettanmaar, chechimaar ammamaar!
Ella Malayalikalkkum ente Hridayam Niranja Nanni pic.twitter.com/axmw72aOls
— Vijay (@actorvijay) March 22, 2024