YouTurn

காவல் மரணங்கள் தவறான தகவலைப் பரப்பும் நடிகர் ரவி!

காவல் மரணங்கள் தவறான தகவலைப் பரப்பும் நடிகர் ரவி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து 24 காவல் மரணங்கள் (custodial deaths) நிகழ்ந்துள்ளன. மேலும் 21 மார்ச் 2025 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, தமிழ்நாட்டில் தாய்வழி இறப்பு விகிதம் (MMR), ஒரு லட்சம் பேருக்கு 70 இறப்புகளுக்கு கீழே உள்ளன என்ற SDG இலக்கை, எப்போதோ எட்டிவிட்டது என்பதை அறிய முடிகிறது. இந்த இலக்கை இந்தியாவில் எட்டு மாநிலங்கள் மட்டும் எட்டியுள்ளன.

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 37 பேர் காவல்நிலையத்தில் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் பிரசவத்தின் போது இறந்து போயிருக்கிறார்கள் - நடிகர் ரவி

image.png

Youtube link

விரிவான விளக்கம்

சின்னத் திரை மற்றும் திரைப்பட நடிகரும், பாஜக ஆதரவாளருமான நடிகர் ரவி, சமீபத்தில் பேசு தமிழா பேசு யூடியூப் பக்கத்திற்கு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் திமுக ஆட்சியில் 37 பேர் காவல்நிலையத்தில் இறந்துள்ளனர் என்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரசவத்தின் போது இறந்து போயிருக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். 


உண்மை என்ன?

முதலில் திமுக ஆட்சியில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியது குறித்து தேடி பார்த்தோம். அப்போது திமுக ஆட்சியில் நடைபெற்ற காவல் நிலைய மரணங்கள் குறித்து வெளியான பட்டியல் ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் திமுக ஆட்சிக்கு அந்த பின்னர் 2022ஆம் ஆண்டிலிருந்து 24 காவல் கொட்டடி மரணங்கள் (custodial deaths) நிகழ்ந்துள்ளன.


சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது போலீஸார் கடுமையாக தாக்கியதால் அஜித்குமார் (27) என்ற இளைஞர் கடந்த ஜீன் 28ஆம் தேதி (சனிக்கிழமை) உயிரிழந்தார். இதை வைத்து திமுக ஆட்சியில் நடந்த காவல் கொட்டடி மரணங்கள் குறித்து Youturn ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம். 


எனவே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 37 காவல் கொட்டடி மரணங்கள் நிகழ்ந்ததாக நடிகர் ரவி பரப்பும் தகவல் பொய்யானதாகும். 


இதையடுத்து தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கானோர் பிரசவத்தின் போது இறந்து போயிருக்கிறார்கள் என்ற தகவலையும் கூறியிருந்தார். இது குறித்து பார்த்த போது, 21 மார்ச் 2025 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கிடைத்தது. அதில் தமிழ்நாட்டில் தாய்வழி இறப்பு விகிதம் (MMR), ஒரு லட்சம் பேருக்கு 70 இறப்புகளுக்கு கீழே உள்ளன என்ற SDG இலக்கை, எப்போதோ எட்டிவிட்டது என்பதை அறிய முடிகிறது. இந்த இலக்கை இந்தியாவில் எட்டு மாநிலங்கள் மட்டும் எட்டியுள்ளன என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு : 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 37 பேர் காவல்நிலையத்தில் இறந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் பிரசவத்தின் போது இறந்து போனதாகவும் நடிகர் ரவி தவறான தகவலை பரப்பி வந்தது ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க