
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X post link | Archive link
விரிவான விளக்கம்
அபுதாபியில் கோவில் திறப்பு விழாவுக்கு சற்று முன் பெய்து வரும் மழை குறித்து, அங்குள்ள நிர்வாகம், இது அடர்ந்த பாலைவனப் பகுதி என்றும், இதுவரை இங்கு மழை பெய்ததில்லை என்றும் கூறுகிறது!
கடவுளின் நித்திய கலாச்சாரத்தின் மகிமை ஆச்சரியமானது, எந்த யாகத்திலும் மழை மிகவும் மங்களகரமானதாக… pic.twitter.com/tU1hJKrcV1
— கைப்புள்ள (@kaippulla123) February 16, 2024

உண்மை என்ன ?
கடந்த 2023 ஜனவரியில் அபுதாபியில் மழைப் பொழிவு குறித்து யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது இருக்கிறது. அதில், அபுதாபியில் பொதுவாக டிசம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்களிலேயே மழைப் பொழிவு அதிகம் நிகழ்கிறது என்றுள்ளது.
அபுதாபியின் அல் ரக்பா துபாய்- அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலை அருகே கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில் ஆனது அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 30கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள பகுதி அபுதாபியின் வானிலை ஆய்வு நிலையத்தின் கீழ் வருகிறது.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீர் மழைப் பொழிவால் போக்குவரத்து நெரிசல், கார் விபத்துகள், வெள்ளம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இதில், துபாயில் 22.2 மி.மீ மழையும், அபுதாபியில் 43.4 மி.மீ மழையும், ஷார்ஜாவில் 35.6 மி.மீ மழையும் செய்துள்ளதாக இடம்பெற்றுள்ளது.

uaestat.fcsc.gov.ae இணையதளத்தில், 2016 முதல் 2020 வரையில் அபுதாபியில் பதிவான மழையளவு பதிவாகி இருக்கிறது. அதன்படி பார்க்கையில், 2016 மார்ச் மாதம் 32 மி.மீ மழையும், 2017 மார்ச் மாதம் 34 மி.மீ மழையும், 2020 ஜனவரியில் அதிகபட்சமாக 60 மி.மீ மழையும் பதிவாகி இருப்பதாக இடம்பெற்றுள்ளது.

2020ல் அபுதாபி பகுதிகளில் மொத்த மழை நாட்களின் எண்ணிக்கை 28 ஆகவும், 2019ல் 38 ஆகவும் இருந்துள்ளது. அதேபோல், இந்து கோவில் அமைந்துள்ள அல் ரக்பா(Al Rahba) பகுதியில் சராசரியாக ஓர் ஆண்டிற்கு மழை பொழிவு நாட்கள் 11 நாட்கள் ஆக உள்ளது. இப்படி இருக்கையில், கோவில் அமைந்துள்ள பகுதியில் மழைப் பெய்ததில்லை எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.

மேலும் படிக்க : சவூதியில் அரசக் குடும்பத்தினர் திருவாசகத்தை தலையில் சுமந்து செல்வதாக வதந்தி !
மேலும் படிக்க : “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறி உரையைத் தொடங்கியது அமீரகத்தின் இளவரசரா ?
முடிவு:
நம் தேடலில், அபுதாபியில் இந்து கோவில் அமைந்துள்ள பகுதியில் இதுவரை மழை பெய்ததில்லை எனப் பரப்பப்படும் தகவல் தவறானது. டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் தான் அபுதாபி பகுதிகளில் மழைப் பொழிவு நிகழ்வதுண்டு. 2020 ஜனவரியில் அபுதாபியில் 60 மி.மீ அளவிற்கு மழையளவு பதிவாகி இருக்கிறது. அதேபோல், கோயிலுக்கு அருகே உள்ள அல் ரக்பா பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 11 நாட்கள் மழைப் பொழிவு நிகழ்கிறது என்பதையும் அறிய முடிகிறது.