YouTurn

தன் குழந்தையை குளிர் சாதன பெட்டிக்குள் வைத்த தாய் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

தன் குழந்தையை குளிர் சாதன பெட்டிக்குள் வைத்த தாய் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இவர்களுக்கு கல்யாணம் புருஷன் புள்ள குட்டி எல்லாம் ஒரு கேடா...



X Link:

விரிவான விளக்கம்

வீட்டிற்குள் மொபைல்போன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெண், காய்களுக்கு பதிலாக தன்னுடைய குழந்தையை குளிர்சாதன பெட்டிக்குள் வைப்பது போன்றது 4:46 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவி வரும் அந்த வீடியோவில், குழந்தையின் அப்பா வீட்டிற்குள் வந்து தொலைந்த குழந்தையை தேடுவதையும், பின்னர் குழந்தை குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

IdeasFactory என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இதன் முழு வீடியோ, "இந்த அம்மாவின் செயலைப் பாருங்கள்" என்ற தலைப்பில் ஏப்ரல் 06 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் "பொறுப்புதுறப்பு: பார்த்ததற்கு நன்றி! இந்தப் பக்கத்தில் சித்தரிப்பு செய்யப்பட்ட (Scripted) நாடகங்கள் மற்றும் கேலிக்கூத்து வீடியோக்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே! இந்த வீடியோவில் உள்ள கதாபாத்திரங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கத்திற்காகவே உள்ளன" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


மேலும் IdeasFactory என்ற ஃபேஸ்புக் பக்கம் குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் பரவி வரும் வீடியோவைப் போன்றே பல சித்தரிப்பு வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 



இதன் மூலம் பரவி வரும் வீடியோ உண்மையானது அல்ல. 'மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது. இதனை உண்மையான வீடியோ என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: ராமர் கொடியை அகற்றிய முஸ்லீம் இளைஞர் எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ

இதற்கு முன்பும் இதே போன்று பல சித்தரிப்பு வீடியோக்கள் உணமையான வீடியோ என்று நினைத்து தவறாகப் பரப்பப்பட்டன. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: பங்களாதேஷில் புர்கா அணியாத இந்துப் பெண்ணை பேருந்தில் ஏற்றவில்லை எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

முடிவு:

நம் தேடலில், தன் குழந்தையை குளிர் சாதன பெட்டிக்குள் வைத்த தாய் எனப் பரவும் வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க