யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வயநாடு பேரிடர் நிலத்தில் தாய் குரங்கை இழந்த இரண்டு குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
வயநாடு பேரிடர் நிலத்தில் நெஞ்சை பதற வைக்கும் காட்சி.. தாய் குரங்கை இழந்த இரண்டு குழந்தை குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் காட்சி... இறைவா! இனியாவது இயற்கை சீற்றங்களில் இருந்து இப்பூஉலகை காத்து அருள்வாயாக பரம்பொருளே..
விரிவான விளக்கம்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடா்ந்து முண்டக்கை, சூரல்மலை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.
இந்நிலையில் வயநாடு பேரிடர் நிலத்தில் தாய் குரங்கை இழந்த இரண்டு குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
*வயநாடு பேரிடர் நிலத்தில் நெஞ்சை பதற வைக்கும் காட்சி..* *தாய் குரங்கை இழந்த இரண்டு குழந்தை குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அனைத்துக்கொள்ளும் காட்சி...*
— ANEES(அன்புடன் அனீஸ்) (@ANEES60533063) August 6, 2024
*இறைவா, இனியாவது இயற்கை சீற்றங்களில் இருந்து இப்பூவுலகை காத்து… pic.twitter.com/Pmo63JRbAA
வயநாடு பேரிடர் நிலத்தில் நெஞ்சை பதற வைக்கும் காட்சி தாய் குரங்கை இழந்த இரண்டு குழந்தை குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் காட்சி... pic.twitter.com/VLkGPAL58g
— RAJESH K VARMA (@KKannan40) August 6, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், வயநாடு பேரிடர் நிலத்தில் தாய் குரங்கை இழந்த இரண்டு குரங்கு குட்டிகள் எனப் பரவும் இந்த வீடியோ வயநாடு நிலச்சரிவின் போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறியமுடிந்தது.
‘binduchaudhary485’ என்ற டிக்டாக் பக்கத்தில் இந்த வீடியோ ஜூலை 20 அன்றே “குரங்கு குட்டி உதவுகிறது” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் #டிக்டாக்_நேபாளம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காணமுடிகிறது.

மேலும் வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து ஆய்வு செய்ததில், அது ஜூலை 30 அன்று தான் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது. எனவே பரவி வரும் வீடியோ வயநாடு நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

ஆனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
முடிவு:
நம் தேடலில், வயநாடு பேரிடர் நிலத்தில் தாய் குரங்கை இழந்த இரண்டு குரங்கு குட்டிகள் மழையிலும் சேற்றிலும் ஆதரவு தேடி ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ, வயநாடு நிலச்சரிவின் போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறியமுடிகிறது.
