யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மணிப்பூரில் கவுன்புய் ரயில்வே ஸ்டேஷன் புதிதாக கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழும் காட்சி என்று கூறி ஒரு நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
மணிப்பூரில், கவுன்புய் ரயில்வே நிலையம் புதிதாக கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழும் காட்சி! மோடியின் ஆட்சியில் ஊழலே இல்லை! ஊழலுக்கு உள்ளேதான் மோடியின் ஆட்சியே நடைபெறுகிறது! எல்லாம் நம் வரிப்பணம்! இந்த தேசத்தை இனி மீட்பதே கஷ்டம்!

விரிவான விளக்கம்
மணிப்பூரில் கவுன்புய் ரயில்வே நிலையம் கட்டுவதில் ஏற்பட்ட ஊழல் காரணமாக, அதன் திறப்புவிழாவுக்கு முன்னரே ரயில்நிலையம் இடிந்துவிழும் காட்சி என்று கூறி ஒரு நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் வீடியோவில், ரயில் நிலையம் ஒன்று ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுவதை தெளிவாகக் காணமுடிகிறது.
The brand new Kawnpui Railway Station in Manipur collapses before inauguration...
— Sanspareil (stop the Genocide)Free Palestine (@SansPareilll) August 30, 2024
Bhaktas will still not open their eyes !!!
Now they will build another one to fill their coffers and that won't even stand for 70 days leave alone 70 years pic.twitter.com/u0Cftd2NJc
At least now Modi is doing it safely - things are not falling on innocent citizens!
— Rajiv Tyagi (@rajivtango) August 29, 2024
The brand new Kawnpui Railway Station in Manipur collapses before inauguration...
Jab main kehta hoon "Modi hi chor hai", chutiye bhakt bigad jaate hain... 🙂
Don't worry. Abhi dobara banega... pic.twitter.com/OMB892WGKr
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை “Google Reverse Image Search” மூலம் தேடிப் பார்த்ததில், ‘Northeast Live’ என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு “மிசோரமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கவுன்புய் ரயில் நிலையம் அடித்துச் செல்லப்பட்டது“ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று நேற்று (ஆகஸ்ட் 29) வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அதில் கவுன்புய் ரயில் நிலையம் தவிர்த்து பல கட்டிடங்கள் நிலச்சரிவினால் இடிந்து விழுவதையும் தெளிவாகக் காணமுடிகிறது.
‘Deccanherald’ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு “மிசோரம் மழை: கவுன்புய்யில் புதிதாக கட்டப்பட்ட ரயில் நிலையம் இடிந்து விழுந்தது“ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 29 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “வடகிழக்கு மாநிலத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருவதால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை (ஆகஸ்ட் 28) பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மிசோரமின் கவுன்புய்யில் புதிதாக கட்டப்பட்ட ரயில் நிலையம் இடிந்து விழுந்தது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று “Nagaland Post“ பக்கத்தில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “மிசோரமின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள கவுன்புய், மிசோரத்தை மற்ற வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய ரயில்வே தடமாக செயல்படுகிறது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக, ஆகஸ்ட் 28, புதன்கிழமை அன்று நடந்த நிலச்சரிவு சம்பவத்தில் அங்கு உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை“ என்றும் குறிப்பிட்டு வெளியிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் இந்த சம்பவம் மணிப்பூரில் நடந்ததாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், மிசோரத்தில் அமைந்துள்ள கவுன்புய் ரயில் நிலையம், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாகத்தான் இடிந்து விழுந்ததுள்ளது என்பதையும் தெளிவாக அறியமுடிகிறது.
ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் மணிப்பூரில் புதிதாக கட்டப்பட்ட கவுன்புய் ரயில் நிலையத்தின் கட்டிடத்தின் தரம் மோசமானதாக இருந்ததால்தான் இடிந்து விழுந்ததாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், மணிப்பூரில் புதிதாக கட்டப்பட்ட கவுன்புய் ரயில் நிலையம், அதன் மோசமான தரம் காரணமாக இடிந்து விழுத்தாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.