யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் வாழும் வங்காள குடியேறிகள் மீது ஜும்மா பழங்குடிகள் வில் அம்புகளால் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
வங்கதேச குஸ்லிம்கள் கொஞ்ச பேரு திரிபுரா மாநிலத்துக்குள் எல்லை வழியாக நுழைய பார்த்துருக்கானுங்க.
திரிபுராவில் உள்ள பழங்குடியினர் அவனுக மேல வில்வச்சு அடிச்சதுல, 50-க்கு மேற்பட்ட வங்கதேசிங்க கை கால் வயிறு அதிகமாக குணடில அம்பு தச்சதோட எல்லைப்புற ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகி உள்ளனர்...

விரிவான விளக்கம்
இளைஞர்கள் சிலர் அம்புகளால் தாக்குப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் காட்சியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘வங்கதேச முஸ்லிம்கள் திரிபுரா மாநிலத்தின் பழக்குடிகளால் தாக்கப்பட்டதாக’ இந்துத்துவ ஆதரவாளர்கள் பரப்பிவருகிறார்கள்.
வங்கதேச முஸ்லிம்கள் திரிபுரா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தபோது பழங்குடி மக்கள் அம்பு எய்தி தாக்குதல் நடத்தி தடுத்தனர்... இந்தியர் உணர்வும் ஒற்றுமையும் ஒரு சேர களத்தில்..
When bangla muslims tried to.enter India they were shot with arrows by the Indian tribals..… pic.twitter.com/pyWsAO4m9v
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘GOMATI EXPRESS NEWS’ என்ற யூடியூப் செய்தித்தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. ‘சிட்டகாங்கை ஆக்கிரமிக்க லுங்கி இராணுவத்தின் நடவடிக்கை!’ என்ற தலைப்பில் மே 13ஆம் தேதியன்று இந்த செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, ‘வங்கதேசத்தில் சிட்டகாங் மலைப்பகுதிகளில் வாழும் ஜும்மா பழங்குடி மக்களிடம் பிரச்சினை செய்ய இவர்கள் சென்றதாகவும், ஜும்மா பழங்குடி மக்கள் இவர்களை வில் அம்புகள் கொண்டு தாக்கியதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடியதில், ‘Cultural Survival’ என்ற தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் ஜும்மா பழங்குடிகள் பற்றி எழுதப்பட்டிருப்பதை காண்கிறோம். அதன்படி, ’வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் மலைப்பகுதிகளில் இந்த ’ஜும்மா பழங்குடி’ மக்களுக்கும் வங்காள குடியேறிகளுக்கும் பிரச்சினைகள் நடந்து வருவதாகவும், கடந்த 2024 செப்டம்பர் மாதம் வங்காள குடியேறிகள் ஒன்று கூடி ‘ஜும்மா பழங்குடி’ மக்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல் நடத்தியதாகவும்’ தெரியவருகிறது.
இதிலிருந்து, இந்த வீடியோ வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் வாழும் வங்காள குடியேறிகள் மீது ஜும்மா பழங்குடிகள் வில் அம்புகளால் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
வங்கதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதியில் வங்காள குடியேறிகள் ’ஜும்மா பழங்குடி’ மக்களால் வில் அம்புகளால் தாக்கப்பட்டதை திரித்து, வங்கதேச முஸ்லிம்கள் திரிபுரா மாநிலத்தின் பழக்குடிகளால் தாக்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.