YouTurn

ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான போராட்டம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஆரவல்லி மலைத்தொடர் தொடர்பான போராட்டம் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குஜராத்தில் உள்ள நெட்ராங் நகரத்தில் பழங்குடி இனத் தலைவர் பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

ஆரவல்லி மலைகளை பாதுகாக்க போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த அளவு கொடுமை பிரிட்டிஷ்கரான் கூட செய்யல. ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு ரீதியில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   மொத்தத்தில் இந்திய குடிமக்கள் எவனுமே சந்தோஷமாக இல்லை சங்கிகளைத் தவிர.



Link / Archive Link

விரிவான விளக்கம்

ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஆரவல்லி மலைத்தொடருக்கான புதிய வரையறை குறித்த உத்தரவை வெளியிட்டது. இந்த மறுவரையறையின் படி, 100 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட பரப்புகள் மட்டும் தான் ஆரவல்லி மலைகளாக (Aravalli hills) ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் 500 மீட்டர் சுற்றளவிற்குள் இவ்வாறு 100 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட மலைகள் இருந்தால் மட்டும்தான் ஆரவல்லி மலைத்தொடர் (Aravalli Range) என ஏற்றுக்கொள்ளப்படும். 


இவ்வாறு உயரத்தை மட்டுமே அளவீடாக கொண்டு ஆரவல்லி மலைத்தொடரை மறு வரையறை செய்வதன் மூலம், இந்த வரையறைக்குள் வராத சிறிய மலைகள், குன்றுகள் ஆகியவற்றில் சுரங்கம் தோண்ட அனுமதி அளிக்கப்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அஞ்சுகின்றனர். இதனால் இந்தியாவில் வடக்கு மாநிலங்களில் இந்த மறு வரையறையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.


இந்நிலையில், ஒரு நகரத்தின் தெருக்களில் மிக பெரும் அளவில் மக்கள் திரள் பேரணி செல்லும் வீடியோவை பதிவிட்டு, ’இந்த போராட்டம் ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம்’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் key frame-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Nikuu 69’ என்ற யூடியூப் தளத்தில் 2025 நவம்பர் 15ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருந்த வீடியோவில் இந்த காட்சியைக் காணமுடிந்தது. அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள நெட்ராங் என்ற  நகரத்தில் பழங்குடி இனத் தலைவர் பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணி நடந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் தேடியதில், இதே வீடியோ மற்றொரு யூட்யூப் தளத்தில் ‘MLA சைதர் வாசவா’ என்று குறிப்பிட்டு பகிரப்பட்டிருந்தது. 



இதனை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், ‘Bhaskar English’ என்ற ஆங்கில செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிகிறது. அதன்படி, குஜராத் மாநிலத்தின் டெடியாபடா சட்டமன்ற தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் MLA சைவர் விசவா பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றியதாக தெரிய வருகிறது. இந்த செய்தியில் இந்த பேரணியின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. 



மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் வீடியோ ஆரவல்லி மலைத்தொடர் சம்பந்தமாக நடைபெற்று வரும் போராட்டத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பது தெரியவருகிறது. இந்த வீடியோ பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் விழா பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்று தவறாக பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க