YouTurn

SIR-ருக்கு பயந்து வங்கதேசம் திரும்பும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

SIR-ருக்கு பயந்து வங்கதேசம் திரும்பும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் காலநில மாற்றத்தின் காரணமாக மக்கள் உள்நாட்டிற்குள்ளே புலம்பெயரும் போது எடுக்கப்பட்டது வீடியோ இது.

பரவிய செய்தி

பயப்படலாம், ஆனால் இந்த அளவுக்கு தொடர் நடுங்கி பயப்படக்கூடாது எஸ் ஐ ஆர் கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்த பிறகு மேற்கு வங்காளத்தில் இருந்து பல்லாயிரம் ரோஹிங்கியா பங்களாதேஷ் முஸ்லிம்கள் பங்களாதேஷ்க்கு திரும்பிச் செல்லும் வீடியோ


இதேபோன்று தமிழ்நாட்டில் இருக்க்கும் முஸ்லிம்கள் திமுக வுக்கு வாக்களிப்பதை தடுக்கும் என்பதற்காகத்தான் இந்த 

எஸ் ஐ ஆர் ஐ எதிர்க்கிறீர்களா



Link / Archive Link

விரிவான விளக்கம்

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அம்மாநிலத்தில் ’சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் (Special Intensive Revision)’ என்ற நடைமுறையின் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அதே போல, வரும் 2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தமிழ்நாட்டிலும் தற்போது  ’சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் (SIR)’ பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முக்கியமாக திமுக சார்பில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறிவர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதே ’சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தின்’ நோக்கம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பலரும் சொல்லிவருகிறார்கள். 


இந்நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக படகில் ஏறிச் செல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ’சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் தொடங்கியவுடன் வங்கதேச முஸ்லிமகளும் ரோஹிங்கியா முஸ்லிம்களும் வங்கதேசத்திற்கு திரும்பிச் செல்லும் காட்சியை பாருங்கள்’ என்று சமூக வலைத்தளத்தில் சங்கப் பரிவார ஆதரவாளர் பரப்புகிறார். 

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ’AP Archive’ என்ற யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.



இந்த செய்தி வீடியோவின் மூலமாக ‘இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதாக’ தெரியவருகிறது. வங்கதேசத்தில் காலநிலை மாற்றத்தின் (climate change) காரணமாக நிறைய மக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு உள்நாட்டிற்குள்ளே அகதிகளாக புலம்பெயர்ந்து வாழம் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், வரும் 2050ஆம் ஆண்டிற்குள் 1.9 கோடி வங்கதேச மக்கள் அந்நாட்டிற்குள்ளே அகதிகளாக புலபெயரும் அவலம் ஏற்படும் என்று இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இவ்வாறு காலநிலை மாற்றத்தின் காரணமாக புலம்பெயரும் மக்கள் வாழ்வதற்காகவே ’மோங்லா’ என்ற நகரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு மேம்படுத்தப்பட்ட அந்நகரத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் இந்த செய்தியில் சொல்லப்படுகிறது. 


மேற்கூறிய தகவல்களிலிருந்து, இந்த வீடியோ 3 ஆண்டுகள் பழையது என்பதும் வங்கதேசத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் உள்நாட்டிற்குள்ளே புலம்பெயரும் போது எடுக்கப்பட்டது என்பதும் தெரியவருகிறது. 


முடிவு:


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை, சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு பயந்து வங்கதேச முஸ்லிம்களும் ரோஹிங்கியா முஸ்லிம்களும் வங்கதேசத்திற்கு திரும்பிச் செல்வதாக சங்கப் பரிவார ஆதரவாளரால் தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க