YouTurn

முஸ்லீம்கள் பழச்சாற்றில் ஆண்மைக் குறைவு இரசாயனத்தைக் கலப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

முஸ்லீம்கள் பழச்சாற்றில் ஆண்மைக் குறைவு இரசாயனத்தைக் கலப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டதாக எந்த செய்தியிலும் குறிப்பிடப்படவில்லை.

பரவிய செய்தி

தில்லியில் மாதுளை ஜுஸில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் இரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்து வந்த அயூப் கான் கைது. கைது செய்யப்பட்டுள்ள அயூப் கான் எனது பாஸ் ஷோயிப்தான் இவ்வாறு கலந்து விற்கச் சொன்னார் என்று உண்மையை கூறியுள்ளான்.

image.png

X Link

விரிவான விளக்கம்

ஒரு சிறிய கடையில் பழச்சாற்றில் கலப்பதற்காக வைத்திருந்த இரசாயனக் கலவையை காவல்துறை கைப்பற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘முஸ்லீம்கள் பழச்சாற்றில் ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்கிறார்கள்’ என்று பாஜக ஆதரவாளர்களால் ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில்,  ‘INDIA TODAY’ செய்தித்தளத்தில் 2024 செப்டம்பர் மாதம் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 


image.png


அதன்படி, ’டெல்லியின் ராஜீந்தர் நகர் பகுதியில் கடை ஒன்றில் பழச்சாற்றில் இரசாயனம் கலக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அந்த கடையில் சோதனை நடத்தியது. அதில் கிடைத்த இரசாயனப் பொருளைக் கைப்பற்றி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் போது கடையிலிருந்த பணியாளர்களான அயூப்கான் மற்றும் ராகுல், கடையின் உரிமையாளர் ஷோயிப் தான் இரசாயனம் கலக்கச் சொன்னதாகக் கூறினர்’ என்பது தெரிய வருகிறது.


image.png


மேலும் இது குறித்துத் தேடியதில், ’ETV Bharat’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியில், ‘இந்த கடையில் பணியாளர்களான அயூப்கான் மற்றும் ராகுல் மாதுளை பழச்சாற்றில் இரசாயனம் கலந்ததாகவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரி அந்த இரசாயனப் பொருளின் சோதனை மாதிரியை எடுத்துச் சென்றதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இரசாயனப் பொருள் குறித்த சோதனை முடிவுகள் கிடைத்த பின்னர் மேற்படியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


இந்த சம்பவம் குறித்து, ‘India News’ யூட்யூப் தளத்தில் வெளியான செய்தியிலும் இதே தகவல்கள் குறிப்பிடப்படுகிறது. எந்த செய்தியிலும் ‘ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டதாக’ குறிப்பிடப்படவில்லை.


ராகுல் என்ற நபரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், இதில் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக மதவாதக் கண்ணோட்டத்தில் பரப்புகிறார்கள். 


முடிவு:


கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பழைய சம்பவத்தை முஸ்லீம் வெறுப்பு கண்ணோட்டத்தில் தற்போது பாஜக ஆதரவாளர்கள் திரித்துப் பரப்புகிறார்கள். மேலும்,  ‘ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் இரசாயனம் கலக்கப்பட்டதாக’ பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க