யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ் கும்ப மேளா நிகழ்ச்சிகாக இந்தியா வந்தது உண்மைதான். ஆனால் பரப்பபடும் வீடியோவில் இருப்பது சாத்வி பகவதி சரஸ்வதி என்பவராவர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
காவி உடையணிந்திருக்கும் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பூஜை செய்வது, பிரசங்கம் செய்வது, ஆற்றில் புனித நீராடுவது போன்ற montage காட்சிகள் அடக்கிய வீடியோவை பதிவிட்டு, ‘இந்தப் பெண் APPLE தொழில்நுட்ப கம்பெனியின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ் என்றும் அவர் கும்ப மேளா நிகழ்வில் கலந்துகொண்டதாகவும்’ தமிழ்நாடு பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் செயலாளர் அசோக் என்பவர் ‘எக்ஸ்’ தளத்தில் பரப்புகிறார்.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில், ‘Sadhviji’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அந்த வீடியோவின் Description-ல் உள்ள தகவலின்படி, இந்த காட்சிகள் சாத்விஜீ என்ற இந்த ஆன்மீகவாதி சமீபத்தில் கும்ப மேளாவின் போது ‘சங்கம்’ என்ற இடத்தில் புனித நீராடியது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சாத்விஜீ என்று அழைக்கப்படும் சாத்வி பகவதி சரஸ்வதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வளர்ந்து, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ரிஷிகேஷ் என்னும் நகரத்தில் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று ‘Indian Yoga Association’ என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பரப்பப்படும் செய்தி குறித்து தேடியதில், ‘Hindustan Times' செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றை காணமுடிந்தது.

'ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ் கும்ப மேளா நிகழ்ச்சிகாக உத்தர பிரதேசத்திம் பிரயாக்ராஜ் நகருக்கு வந்துள்ளதாவும், மேலும் அவர் சனாதன தர்மத்தில் இணைய விரும்பவதாகவும்’ அவரது குரு நிரஞ்சனி அகாரா கூறியுள்ளார் என்பது அந்த செய்தியின் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ் கும்ப மேளா நிகழ்ச்சிக்காக இந்தியா வந்தது உண்மைதான். ஆனால் பரப்பபடும் வீடியோவில் இருப்பது சாத்வி பகவதி சரஸ்வதி என்பவராவர்.
முடிவு:
சாத்வி பகவதி சரஸ்வதி என்ற ஆன்மீகவாதியை, ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ்லாரன் பவல் ஜாப்ஸ் என்று தவறாக பரப்புகின்றனர்.
