YouTurn

உ.பி.யில் போலீஸ் சங்கராச்சாரியாரை தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

உ.பி.யில் போலீஸ் சங்கராச்சாரியாரை தாக்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ 2015 ஆண்டு வாரணாசி நகரத்தில் கங்கை நதியில் விநாயகர் சிலை கரைப்பது தொடர்பான பிரச்சனையின் போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் அவர்களை காவல்துறை ஏவி மரண அடி அடித்துள்ளது ஆளும் பாஜக அரசு.. உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சங்கராச்சாரியார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


image.png


X Link

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேச அரசால் ’உலகின் மிகப்பெரிய மதக் கூடுகை’ என்று பெருமையாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட கும்பமேளா 45 நாட்களாக நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இதில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி பிரயாக்ராஜ் நகரில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் ஏற்பட்ட 30 பேர் இறந்தனர். ’இந்த இறப்புகள் குறித்து தவறான தகவல்களைக் கொடுத்து சன்னியாசிகளைக் குழப்பியதாக’ உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது சங்கராச்சாரியார் அவிமுகேஷ்வரானந்த சரஸ்வதி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், காவி உடை அணிந்த ஒருவரை காவல்துறை தடியால் அடிக்கும் காணொளியைப் பதிவிட்டு, ’ஆளும் பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவதன் காரணமாக பாஜக அரசு காவல்துறையை ஏவி சங்கராச்சாரியார் அவிமுகேஷ்வரானந்த்-ஐ அடித்ததாக’ சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.

https://x.com/i/web/status/1889212291322724368

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில்,‘First India News’ என்ற செய்தி ஊடகத்தின் யூட்யூப் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2015 செப்டம்பர் 23 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவின் Description-ல் ‘விநாயகர் சிலையைக் கங்கை நதியில் கரைப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையில், மக்கள் காவல்துறை மீது கற்களை வீசியதாகவும், இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய தடியடியில் 15 நபர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்துத் தேடுகையில் ’The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் இதுபற்றிய செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, இந்தச் சம்பவம் வாரணாசி நகரத்தில் நடந்ததாகவும் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா இந்த போராட்டத்தை நடத்தியதாகவும், 25 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ 2015 ஆண்டு வாரணாசி நகரத்தில் கங்கை நதியில் விநாயகர் சிலை கரைப்பது தொடர்பான பிரச்சனையின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. 


முடிவு:


2015ஆம் ஆண்டு  கங்கை நதியில் சிலை கரைப்பது தொடர்பான பிரச்சனையின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை திரித்து, தற்போது நடந்து வரும் கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியாரை காவல்துறை தாக்கியதாகத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க