YouTurn

உத்தரப் பிரதேசத்தில் கோலி பாண்டிகையின் போது வன்முறை ஏற்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

உத்தரப் பிரதேசத்தில் கோலி பாண்டிகையின் போது வன்முறை ஏற்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்த சம்பவமாகும்.

பரவிய செய்தி

உத்தரப் பிரதேசத்தில் கோலி பாண்டிகையின் போது ஏற்பட்ட வன்முறை.


image.png


Facebook Link

விரிவான விளக்கம்

இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்துகிறார்கள். மேலும், சாலையில் செல்லும் பிற வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளைத் தாக்குகிறார்கள். இதனை காட்சிபடுத்தும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் கோலிப் பண்டிகையின் போது நடந்தது என்று பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘INDIA TODAY’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காண முடிந்தது. அதில், ’அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில், 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல், கத்திகள் மற்றும் தடிகளுடன் சாலையில் வந்து வாகனங்களைச் சேதப்படுத்தியதோடு மக்களையும் தாக்கியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


மேலும், ’சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை தாக்கியதோடு, பாதசாரிகளையும் தாக்கியிருக்கிறது இந்த கும்பல். தெருவிலிருந்த கடைகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. சாலையில் வந்துகொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி அதில் உள்ளவர்களை தாக்கியிருக்கிறார்கள்’ என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


’இரண்டு எதிரெதிர் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும்’ இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


’வஸ்த்ரல் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்ததாகும். இது சம்பந்தமான தகவல் கிடைத்ததும் காவல் ஆய்வாளர் ராமோல் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றார். இதுவரை 13 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்று அகமதாபாத் நகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டிருக்கிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து இந்த வெறியாட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில் நடந்தது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.


முடிவு:


அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ’வஸ்த்ரல்’ என்னும் பகுதியில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்த சம்பவமாகும் இது. இதனை உத்தரப் பிரதேசத்தில் கோலிப் பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடந்ததாகத் தவறாகப் பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.