YouTurn

திமுக உறுப்பினர் காவல்துறையிடம் அடிவாங்குவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

திமுக உறுப்பினர் காவல்துறையிடம் அடிவாங்குவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் நடந்த பழைய சம்பவம். DSP கணேஷ் காவ்டே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டரான பிரமோத் மொஹோத் அடித்தபோது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

இந்த போலீஸ்காரரிடம் அடி வாங்கி ஆள் யார் தெரியுமா? தி மு க காரன் தான். ஆனா யார்' னு தெரியல...



X Link  

விரிவான விளக்கம்

சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் சுற்றிலும் நிற்க, ஒரு வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவரிடம் அதிகாரி ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென அந்த காவல்துறை அதிகாரி அந்த வெள்ளைச் சட்டை அணியிந்த நபரை அடிக்கிறார். 18 நொடிகள் ஓடும் இந்த சிறு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘இப்படி காவல்துறையிடம் அடிவாங்கும் நபர் திமுக உறுப்பினர் தான்’ என்று நாம் தமிழர் ஆதரவாளரால் பரப்பப்படுகிறது. 

https://x.com/i/web/status/1902238003676017091

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில்,NewsX’ என்ற செய்தித்தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்னதாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ‘மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சந்திரப்பூர் என்ற பகுதியின் DSP கணேஷ் காவ்டே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டரான பிரமோத் மொஹோத் என்பவரை அடித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


image.png


மேலும் தேடியதில், ‘Zee 24 Taas’ என்ற செய்தித்தளத்தில் இதுகுறித்த மற்றொரு வீடியோவைக் காணமுடிந்தது.  2013 டிசம்பர் 22 அன்று பதிவேற்றப்பட்டுள்ள அந்த வீடியோவில், ‘இந்த சம்பவத்திற்காக DSP கணேஷ் காவ்டே பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை வைப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


இதிலிருந்து இந்த சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் நடந்த பழைய சம்பவம் என்பது உறுதியாகிறது. 


முடிவு:


மகாராஷ்ட்ராவில் 2013ஆம் ஆண்டு நடந்த பழைய சம்பவத்தின் வீடியோவை தற்போது தமிழ்நாட்டில் போலீஸ் திமுகவைச் சேர்ந்தவரை அடித்ததாக தவறாகப் பரப்புகின்றனர். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.