YouTurn

முஸ்லீம்கள் பேரிச்சம்பழத்தில் கரு அழிப்பு மருந்தை கலப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

முஸ்லீம்கள் பேரிச்சம்பழத்தில் கரு அழிப்பு மருந்தை கலப்பதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பேரிச்சம்பழத்தில் மயக்க மருந்து கலந்த நபர்களை இரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.

பரவிய செய்தி

இந்துக்களை குறிவைத்து இந்து பெண்கள் கர்பப்பை கருமுட்டைகளை அழிந்து குழந்தை இல்லாமல் செய்யும் மற்றும் விரைவில் சில வருடங்களில் மரணத்தை ஏற்படுத்தும் இந்த மாத்திரைகள் மற்றும் ஆண்களுக்கு ஆண்மை இல்லாத மலட்டு தன்மை மற்றும் குறுகிய வருடத்தில் மரணம் ஏற்படுத்தும் இந்தியாவை இஸ்லாமிய நாடக மாற்ற வேண்டும் என பயங்கரவாதிகள் இந்தியாவில் பல இடங்களில் இது போன்று சுற்றி திரிவதை கண்டு பிடித்த காவல் துறை எச்சரிக்கை இந்து சகோதரர் சகோதரிகளே மு.இஸ்லிம் நபர்களிடம் எச்சரிக்கை யாரேனும் தெரியாத சக பயணிகளிடமிருந்து பேரீச்சம் பழங்களை எடுக்கவோ, ரயில் நிலையத்திலோ அல்லது ரயில் நிலையத்தில் உள்ள விற்பனையாளர்களிலோ பேரிச்சம் பழங்களை வாங்கவோ வேண்டாம் என உங்கள் தொடர்புகளுடன் இந்த செய்தியைப் பகிரவும்.

விரிவான விளக்கம்

மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை சேரிச்சம்பழத்தில் கலப்படம் செய்துகொண்டே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஒருவரின் வீடியோவை பதிவிட்டு, ‘இந்து பெண்களின் கருமுட்டைகளை அழிக்கவும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தவும் இஸ்லாமியர்கள் இதுபோன்று பேரிச்சம்பழத்தில் மாத்திரைகளை கலந்துகொடுப்பதாவும், இஸ்லாமியர்களின் ஜனத்தொகையை அதிகரித்து இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் இதனை அவர்கள் செய்வதாகும் WhatsApp செயலியில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன:

பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில் ‘Taaza TV’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்த செய்தியை காணமுடிந்தது. ஜனவரி 13ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இந்த வீடியோவின் Description-ல் ‘போதை கும்பல் இரயில் பயணிகளிடன் கொள்ளையடிக்க பேரிச்சம்பழத்தில் மாத்திரையை கலக்கும் தனிவழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஹவுரா இரயில் நிலையத்தில் இரயில்வே போலீஸார் இவர்களைக் கைது செய்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png

மேலும் தேடுகையில், ‘MUNSIF TV INDIA’ என்ற யூட்யூப் தளத்தில் 2025  ஜனவரி 20ஆம் தேதி அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியில், ’இந்த நபர் பயணிகள் சாப்பிடும் பேரிச்சம்பழத்தில் தூக்க மாத்திரை கலந்து, பயணிகள் தூங்கிய பிறகு அவர்களது உடைமைகளை கொள்ளையடித்திருக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், இது குறித்து தேடிய போது தளத்தில் ‘HOWRAH RAILWAY POLICE’ தளத்தில் இது சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை (FIR) கிடைத்தது. அதன்படி, 11.01.2025 அன்று பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த  முதல் தகவல் அறிக்கையில்,  ஷம்ப்ரு பாஸ்வான், கோவிந்த் குமார், முகமது இர்பான் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். 

மேலும் அவர்கள் பேரிச்சம்பழத்தில் கலந்த மருந்து 'Ativan 2 mg' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மருந்து குறித்து தேடியதில், இது மூளையை சாந்தப்படுத்தும் வேதிக்கூறுகளை சுரக்கத் தூண்டும் என்று குறிப்பிடிப்பட்டிருக்கிறது. இதை உட்கொண்டால் தூக்கம் வரும் என்றும்,  அறுவை சிகிச்சைக்கு முன்பாக கொடுக்கப்படும் மயக்க மருந்து (sedative drug) என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

மேற்கூறிய விவரங்களில் இருந்து, பேரிச்சம்பழத்தில் மருந்து கலப்பது பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில்தான் என்பதும், இந்த மருந்து ‘மயக்க or தூக்க மருந்து’ தான், கரு அழிப்பு அல்லது மலட்டுத்தனம் ஏற்படுத்தும் மருந்து அல்ல என்பதும் தெரிய வருகிறது. மேலும், இதில் எவ்விதத்திலும் மதம் சம்மந்தப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. 

முடிவு:

இரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பேரிச்சம்பழத்தில் மருந்து கலக்கப்பட்ட விவாகரத்தை, மதவாத கண்ணோட்டத்தில் திரித்து இந்துகளின் மக்கள்தொகையை சீர்குலைக்க முஸ்லீம் பயங்கரவாதிகள் கருஅழிப்பு மருத்தை கலப்பதாக தவறாக பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க