யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’Tidal Bore’ எனப்படும் ஆற்றில் ஏற்றப்படும் பெரிய அலைகள் பற்றி விளக்கிக்கொண்டிருக்கும் எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஆர்ப்பரித்து வரும் அலைகளுக்கு எதிரில் ஒருவர் கைகளை உயர்த்தி நின்றுகொண்டிருக்கிறார். அலைகள் அவரை நெருங்கி வந்ததும், நிலைமையை புரிந்துகொண்டு தண்ணீரில் மூழ்காமல் இருக்க ஓடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டு, இந்த நபர் முஸ்லிம் என்றும் சுனாமியை தடுக்க அல்லாஹ்விடம் பிராத்தனை செய்து பயனில்லாமல், உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறார் என்றும் ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘MEN'S JOURNAL’ என்ற வலைதளத்தில் இதுபற்றிய தகவலைக் காணமுடிந்தது. அதில் ’தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் பெரிய Tidal Boreரிடமிருந்து தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறார்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த வீடியோவில் இருப்பவரின் பெயர் ‘ரிச்சர்ட் ராஸ்முசென்’ என்பதாகும். இவரை பிரேசில் நாட்டின் பியர் கிரில்ஸ் என்றும் குறிப்பிடுகிறார்கள். Man vs Wild நிகழ்ச்சியில் வரும் பியர் கிரில்ஸ் போல காடு, மலைகளில் சாகசப் பயணம் மேற்கொள்பவர் இவர்.

இவர் யூட்யூப் தளத்தில் Lado B என்ற நிகழ்ச்சியில், அமேசான் ஆற்றுப் படுகையில் “Tidal Bore” என்னும் நிகழ்வுப்போக்கை விளக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது. இந்த ’Tidal Bore’ என்பது ஆற்றின் மேற்பரப்பில் ஏற்படக்கூடிய அலைகளாகும். ஆற்றின் நீர் விரிந்த பரப்பில் இருந்து தீடீரென குறுகலான இடத்திற்குள் பாயும்போது இது போன்ற அலைகள் ஏற்படும். இதனை விளக்கிக் கொண்டிருக்கும் போது திடீரென அலை அதிகமானது, அதனைப் புரிந்துகொண்டு தண்ணீரில் மூழ்காமல் இருக்க ஓடுகிறார் ரிச்சர்ட் ராஸ்முசென்.
இதனை திரித்து முஸ்லிம் ஒருவர் சுனாமியை தடுக்க பிராத்தனை செய்ததாகவும், பின்னர் உயிருக்கு பயந்து ஓடியதாகவும் தவறாக பரப்பப்படுகிறது.
முடிவு:
இந்து வீடியோவில் இருப்பவர் ரிச்சர்ட் ராஸ்முசென் என்ற சாகச நிகழ்ச்சியாளர். ’Tidal Bore’ எனப்படும் ஆற்றில் ஏற்படும் பெரிய அலைகள் பற்றி விளக்கிக்கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவை திரித்து முஸ்லிம் ஒருவர் சுனாமியை தடுக்க பிராத்தனை செய்வதாக தவறாக பரப்பப்படுகிறது.
