YouTurn

தந்தை மகளை திருமணம் செய்துகொண்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

தந்தை மகளை திருமணம் செய்துகொண்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோவில் இருப்பது உண்மைச் சம்பவம் அல்ல. இது பொழுதுபோக்கிற்காக போலியாக எடுக்கப்பட்ட ஒன்று.

பரவிய செய்தி

டேய் சங்கீஷ். டேய் ஆமைஸ். சரஸ்வதிய பிரம்மா கல்யாணம் செஞ்சப்போ நான் என் அப்பன கட்டினது என்ன தப்பு. எந்த நாயும் எங்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம். சனாதனம் இதுதாண்டா சனாதனா



X Link

விரிவான விளக்கம்

திருமணமானது போன்று நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் இளம்பெண் ஒருவர், ஓரளவு வயதான தோற்றமுடைய நபரைக் காட்டி, "இவர்தான் எனது தந்தை. நாங்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை இந்த உலகிற்கு காட்டியிருக்கிறோம். எங்களுக்கு யாரும் ஆதரவு தரவில்லை. யாரேனும் எங்களை ஆதரிக்கிறார்களா? இல்லையா? என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை" என்று கூறுகிறார்.  மேலும், 'இது உங்களுடைய மகளா?' என்ற கேள்விக்கு, அந்த வயதான நபர், 'ஆம். இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை' என்கிறார். திமுக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு 'இது தான் சனாதனம்' என்று பரப்புகின்றனர். 


https://x.com/i/web/status/1879894145873092953


உண்மை என்ன:


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Ankita Karotiya’ யூட்யூப் தளத்தில் ‘நான் எல்லோரிடம் கூற விரும்புகிறேன்’ என்ற தலைப்பில் இதன் முழு நீள வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த முழு வீடியோவில், ’இவர் உங்கள் தந்தையா?’ என்ற கேள்விக்கு அந்தப் பெண், ‘இவர் என் மாமனார்’ என்று குறிப்பிடுகிறார்.


image.png


மேலும் இந்த யூட்யூப் தளத்தில் தேடியதில், பரப்பப்படும் வீடியோவில் இருக்கும் இளம்பெண்ணும், வயதான நபரும் இருக்கும் வேறொரு வீடியோவை காண முடிந்தது. 


image.png



மேலும், இந்த யூட்யூப் பக்கத்தின் முகப்பில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றின் Link-ஐ காணமுடிந்தது. அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் ‘இந்த வீடியோகளில் இருக்கும் அங்கிதா என்னும் பெண் டெல்லியைச் சேர்ந்த prankstar’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, அந்தப்பெண் பொழுதுபோக்கு அம்சத்திற்காக வீடியோகளை வெளியிடுபவர். 


image.png


மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில், தந்தை மகளை திருமணம் செய்துகொண்டது போன்ற இந்த வீடியோ உண்மைச் சம்பவம் அல்ல. இது பொழுதுபோக்கிற்காக போலியாக எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. 


முடிவு: 


தந்தை மகளை திருமணம் செய்வதை நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட போலி வீடியோவாகும். இதனை உண்மை என நினைத்து பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க