யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வீடியோவில் இருப்பது உண்மையான முதலை அல்ல, அது முதலை போன்று வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்ட ரோபாட் (Robot).
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
’முதலையால் முழுங்கப்பட்ட நபரை மற்றொரு நபர் கையைப் பிடித்து முதலையின் வாய் வழியாக வெளியே கொண்டுவரும்’ வீடியோவை பதிவிட்டு, ’முதலை வாய்க்குள் போடிவிட்டு வெளியே வந்த நபர்’ என்று சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’NDTV’ செய்தித்தளத்தில் வெளியான ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதன்படி, சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவில் இருப்பது உண்மையான முதலை அல்ல, அது ஒரு ரோபாட் (Robot) என்று தெரியவருகிறது.

"Robot Crocodile" என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட இந்த வீடியோவிற்கு 6 லட்சம் விருப்பக்குறிகள் வந்திருக்கின்றன. மேலும், உண்மையான உயிருள்ள முதலையைப் போன்று அதனை வடிவமைத்து இயக்கிய நபர்களின் தொழில்நுட்பத் திறனை சமூக வலைதளத்தில் வெகுவாக பாராட்டப்பட்டதாக இந்த செய்தி குறிப்பிடுகிறது.
மேலும், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவின் ’original post’-ன் link இந்த செய்தியில் Embed செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவின் ’original post’ தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்த வீடியோவில் இருப்பது உண்மையான முதலை அல்ல, அது முதலை போன்ற ரோபாட் என்பது தெரிகிறது.
முடிவு:
முதலை போன்று வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்ட ரோபாட்டை (Robot) உண்மையான முதலை என நினைத்து தவறாக பரப்பப்படுகிறது.
