YouTurn

ஆயத்த ஆடைகளுக்கு மொத்த பில்லை அடிப்படையாக கொண்டு வரி விதிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

ஆயத்த ஆடைகளுக்கு மொத்த பில்லை அடிப்படையாக கொண்டு வரி விதிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆயத்த ஆடைகள் ஒவ்வொன்றுக்கும் per piece என்ற விதத்தில் தான் வரி விதிக்கப்படும். அது 2500-க்குள் இருந்தால் 5 சதவீதமும் அதற்கு மேல் விலை இருந்தால் 18% வரியும் விதிக்கப்படுகிறது.

பரவிய செய்தி

* தீபாவளிக்கு துணி எடுக்க சென்றீர்கள் என்றால் குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினீர்கள் என்றால்... துணியை பிரித்து கொடுத்து 3 Bill போடுங்கள்

* 2000 1st bill 5% Gst 100

* 2000 2nd bill 5%Gst 100

* 2000 3rd bill 5%Gst 100

* மொத்த மதிப்பு Rs. 6300

இதுவே நீங்கள் ஒரே Bill போட்டால்

* 6000 18%Gst 1080

* மொத்த மதிப்பு 7080

நீங்கள் எத்தனை ரூபாய் வாங்கினாலும் 2000 ரூபாய்க்கு மேல் பில் போடாதீர்கள்.

2500 வரை 5% GST 2625 Extra 125

2501 + எனில் 18 % GST 2951.18 Extra 450.18

கவனமாக பணத்தை கையாளுங்கள்.



WhatsApp Forward

விரிவான விளக்கம்

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டது.  12% மற்றும் 28% வரி ஆகிய அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற வரி அடுக்குகள் புதிதாக கொண்டுவரப்பட்டன. திருத்தியமைக்கப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அமலுக்கு வந்தது.


இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் பரவிவரும் தகவல் ஒன்றில், ‘தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது மொத்தமாக பில் போடாதீர்கள். நீங்கள் எத்தனை ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினாலும் 2000 ரூபாய்-யாக பிரித்து பில் போடுங்கள். 6000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கியிருந்தால் அதனை மூன்று 2000 என பில் போடுங்கள். அப்போதுதான் 5% ஜிஎஸ்டி வரி போடுவார்கள். 2500க்கு மேல் பில் போட்டால் 18% வரி போடுவார்கள்’ என்று சொல்லப்படுகிறது.



உண்மை என்ன? 


ஆயத்த ஆடைகளுக்கு புதிதாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்து தேடினோம். ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தளமானPress Information Bureau’-ல் ஜிஎஸ்டி வரித் திருத்தங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டோம். அதில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. 


image.png


அதில் ஜவுளிதுறையில் நூல் இழைகளுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், நூலுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2500 ரூபாய் வரையுள்ள ஆயத்த ஆடைகளுக்கு ஜிஎஸ்டி 5% தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1000 ரூபாய் வரையில் இந்த வரம்பு இருந்தது. இந்த வரி விகிதம் ‘per piece’ வகையில் விதிக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் தேடியதில், ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் இவ்வாறு இரண்டு அடுக்கில் ஆயத்தை ஆடைகளுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘ரூ. 2500க்கும் மேலுள்ள ஆயத்தை ஆடைகளை பெரும்பாலும் சாதாரண நடுத்தர வர்க்க மக்கள்தான் வாங்குகிறார்கள். இதற்கு அதிக வரி விதிக்கப்பட்டால் அதன் விலை மிக அதிகமாக இருக்குமென்று’ இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் (CMAI) வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது ரூ.2500க்கும் மேல் விலையிருக்கும் ஆடைகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவார்கள் என்று கவலை தெரிவிக்கிறார்கள். இது இந்த வரி ’per piece’ விதத்தில் தான் விதிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.


அதாவது ஒரு சட்டை 2400 ரூபாய் என்றால் அதற்கு 5% வரி விதிக்கப்படும். மற்றொரு சட்டை 2600 ரூபாய் என்றால் அதற்கு 18% வரி விதிக்கப்படும். ஆனால் பரப்பப்படும் செய்தியில், நீங்கள் ரூ. 1000 மதிப்புள்ள மூன்று சட்டைகள் வாங்கினால் 18% வரி விதிக்கப்படும் என்று தவறாக பரப்பப்படுகிறது. அந்த மூன்று சட்டைகளில் ஒவ்வொன்றும் ரூ. 1000 இருக்கும் பட்சத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக  (per piece) 5% வரிதான் விதிக்கப்படும். மொத்தம் ரூ. 3000 என்ற ரீதியில் 18% விதிக்கப்படாது.


முடிவு:


மொத்த பில் தொகையை வைத்தே ஆயத்த ஆடைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று பரப்பப்படுவது தவறான தகவலாகும். ஆயத்த ஆடைகள் ஒவ்வொன்றுக்கும்  'per piece’ என்ற விதத்தில் தான் வரி விதிக்கப்படும். அது 2500-க்குள் இருந்தால் 5 சதவீதமும் அதற்கு மேல் விலை இருந்தால் 18% வரியும் விதிக்கப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க