யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த ரேடார் இயந்திரம் ’Northrop Grumman’ என்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.
பரவிய செய்தி
நம் DRDO உருவாக்கியுள்ள Super Radarஇது. விருப்பாக்ஷா என பெயரிடப்பட்டRadar உலகின் மிக அதி நவீன Hypersonic Missiles,low flying Drones என எந்த ஒரு பறக்கும் பொருளையும் அடையாளம் காணும், எல்லைக்கு பலகி.மீ தூரத்திற்கு முன்பே கணித்து கண்காணிப்பை தரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்
குறிப்பிட்டதொரு இயந்திரங்கள் வரிசையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இது இந்தியாவின் ’பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)’ புதிதாக உருவாக்கியுள்ள அதி நவீன ரேடார் (Radar) தொழில்நுட்பம் என்றும், இது ஏவுகணை, ட்ரோன் போன்ற எந்தவொரு பறக்கும் பொருளையும் கண்காணிக்கும் திறன் வாய்ந்தது என்றும் சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் பரப்பப்படுகிறது.
நம் DRDO உருவாக்கியுள்ள Super Radarஇது.
விருப்பாக்ஷா என பெயரிடப்பட்டRadar உலகின் மிக அதி நவீன Hypersonic Missiles,low flying Drones என எந்த ஒரு பறக்கும் பொருளையும் அடையாளம் காணும், எல்லைக்கு பலகி.மீ தூரத்திற்கு முன்பே கணித்து கண்காணிப்பை தரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/TpquRc0xLo
உண்மை என்ன?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடியபோது, ’BULGARIAN MILITARY’ என்ற தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 2023 ஜீலை மாதம் வெளியாகியுள்ள இந்த செய்தியில் இடம்பெற்றிருந்த இந்தப் புகைப்படத்தின் கீழ் ‘Photo credit: Northrop Grumman’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ’Northrop Grumman’ என்பது அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் என்றும், அது விண்வெளி, பாதுகாப்புத்துறை (Defense) போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் தெரியவருகிறது.

’Northrop Grumman’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரப்பப்படும் இந்த புகைப்படம் இருக்கிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் இயந்திரம், Active Electronic Scanning Array [AESA] என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ரேடார் (Radar) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து, இந்த ரேடார் இயந்திரம் ’Northrop Grumman’ என்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
அமெரிக்க பாதுகாப்புத்துறை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ரேடார் இயந்திரத்தை, இந்தியாவின் DRDO நிறுவனம் உருவாக்கியுள்ள அதி நவீன ரேடார் என்று பாஜகவினர் தவறாக பரப்பிவருகிறார்கள்.