யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்திராகாந்தியின் இறுதிச் சடங்கின்போது, அவரது உடலுக்கு முன் ராகுல்காந்தியும் ராஜீவ்காந்தியும் கல்மா ஓதுவதைப் பாருங்கள், ஆனாலும் இவர்களை இந்துக்கள் என்றுதான் நம் நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
இந்தப் புகைப்படம் மிகவும் சிரமத்துடன் கண்டுபிடிக்கப்டது. இந்திரா காந்தியின் பிணத்தின் முன் ராகுல்காந்தியும் ராஜீவகாந்தியும் கல்மா ஓதுகிறார்கள். ஆனாலும் இவர்களை இந்துக்கள் என்றுதான் நம் நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்!
விரிவான விளக்கம்
இந்திராகாந்தியின் இறுதி சடங்கின்போது, அவரது உடலுக்கு முன் ராகுல்காந்தியும் ராஜீவ்காந்தியும் கல்மா ஓதுவதைப் பாருங்கள், ஆனாலும் இவர்களை இந்துக்கள் என்றுதான் நம் நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் புகைப்படத்தில், ராஜீவ் காந்தி மற்றும் அவருக்கு அருகில் இருப்பவரின் முகம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
இந்திரா பேரோஸ் இறந்தபோது கல்மா ஓதுகிறார்கள் ராஜீவும், ராவுலும். இவர்களை இன்னும் இந்து என எண்ணும் இந்துக்கள் ஏராளம். pic.twitter.com/A63xMXM3pF
— Skm (@vasudevakudumba) August 19, 2024
श्रीमती इंदिरा गांधी के पार्थिव शरीर को श्रद्धांजलि देते हुए स्व राजीव गांधी और राहुल गांधी के हाथों की मुद्रा देखिए– बगल में ही स्व पीवी नरसिंह राव के हाथों के प्रणाम की भी मुद्रा देखिए।
— Awanish P. N. Sharma 🇮🇳 (@KrAwanish) August 2, 2024
जाति तो बाद में बताना प्यारे– पहले तो मजहब ही बताओ राहुल गांधी! pic.twitter.com/mNGvA5r439
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை ‘Google Reverse Image Search’ மூலம் தேடிப் பார்த்ததில், இது கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதை அறியமுடிந்தது
बड़ी मुश्किल से यह फोटो मिली है ** इंदिरा गांधी की लाश के सामने राजीव गांधी एवं राहुल गांधी कलमा पढ़ रहे हैं फिर भी हमारे देश के लोगों को लगता है ये लोग हिन्दू हैं...!! pic.twitter.com/EtewaSwdtz
— Rajesh Keshri (@rajeshk9835455) June 9, 2021
‘Skyscrapercity’ இணையப் பக்கத்தில், இந்திய பிரதமரான ராஜீவ்காந்தி பாகிஸ்தான் சென்றபோது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பரவி வரும் இதே புகைப்படம், கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் புகைப்படத்தின் கீழே “பெஷாவரில் பச்சா கானின் இறுதிச் சடங்கு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே இதுகுறித்து இணையத்தில் மேலும் தேடுகையில், ‘Pakhtunkhwa Diaries’ என்ற யூடியூப் பக்கத்தில், “1988ஆம் ஆண்டு பெஷாவரில் கான் அப்துல் கபார் கானின் இறுதிச்சடங்கில் இந்தியாவின் ஆறாவது பிரதமரான ராஜீவ்காந்தியின் வருகையின்போது எடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
அதில் சரியாக வீடியோவின் 0:50 வது நிமிடத்தில் பரவி வரும் புகைப்படத்தில் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

மேலும் பெஷாவரில் அப்துல் கபார் கானின் இறுதிச் சடங்கில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டது குறித்து ‘United Press International’ ஊடகப் பக்கத்தில் கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தனது மனைவி சோனியா காந்தியுடன், பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவரில் அப்துல் கபார் கானின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, இந்திரா காந்தியின் இறுதி சடங்கில் எடுக்கப்பட்டதாகக் கூறி பலரும் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறியமுடிகிறது. மேலும் பரவி வரும் புகைப்படத்தில் ராகுல்காந்தி இருப்பதாகக் கூறுவதும் தவறான தகவலே.
மேலும் படிக்க: இந்திரா காந்தி ஹிஜாப் அணிந்து இருப்பதாக வதந்தி பரப்பும் பாஜகவினர் !
இதற்கு முன்பும் இந்திராகாந்தி குறித்து பல செய்திகள் தவறாகப் பரப்பப்பட்டன. அப்போதே இதுகுறித்து ஆய்வுசெய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: தன் கணவர் முஸ்லீம் என்பதால் இந்திரா காந்தி மதம் மாறினாரா ?
முடிவு:
நம் தேடலில், இந்திராகாந்தியின் இறுதிச்சடங்கின்போது, அவரது உடலுக்கு முன் ராகுல்காந்தியும் ராஜீவ்காந்தியும் கல்மா ஓதுவதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
