யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது Edit செய்து உருவாக்கப்பட்ட போலியான News Card ஆகும்.
பரவிய செய்தி
'எந்த ஆட்சி வந்தாலும் லாக்கப் மரணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது; அய்யா ஸ்டாலின் ஆட்சியிலாவது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அய்யா எடப்பாடி ஆட்சியில் நடந்த லாக்கப் மரணம் இன்னும் விசாரணையில் தான் உள்ளது.
-நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

விரிவான விளக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது போலீஸார் கடுமையாக தாக்கியதால் அஜித்குமார் (27) என்ற இளைஞர் கடந்த ஜீன் 28ஆம் தேதி (சனிக்கிழமை) உயிரிழந்தார். கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் 24 காவல் கொட்டடி மரணங்கள் (custodial deaths) நடந்துள்ளது. இதில் அஜித்குமாரின் மரணத்தையும் சேர்த்தால் 25 காவல் கொட்டடி மரணங்கள் நடந்துள்ளன. பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நடந்துவரும் காவல்துறை அராஜகங்கள் குறித்து கருத்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "எந்த ஆட்சி வந்தாலும் லாக்கப் மரணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது; ஸ்டாலின் ஆட்சியிலாவது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எடப்பாடி ஆட்சியின் போது நடந்த சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்கப் மரண வழக்கு இன்னும் விசாரணையில் தான் உள்ளது" என்று கருத்து தெரிவித்ததாக ’புதிய தலைமுறை’ ஊடகத்தின் News Card ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
நம்ம சைமனா இது? pic.twitter.com/M0jg3q2IcP
உண்மை என்ன?
’புதிய தலைமுறை’ ஊடகத்தின் சமூக வலைத்தளப் பக்கத்தில் தேடியபோது, இதுபோன்ற News Card எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை அறிகிறோம். இது குறித்து ’புதிய தலைமுறை’-யிடம் தொலைபேசி மூலமாக கேட்டபோது, ‘இதுபோன்ற News Card ஏதும் வெளியிடப்படவில்லை’ என்று பதிலளித்தனர். பரப்பப்படும் NewsCard-ல் இருப்பது போன்ற கருத்தை சீமான் பேசியுள்ளாரா என்று இணையத்தில் தேடியபோது, அவர் அதுபோன்ற கருத்தை கூறியதாக எதுவும் பதிவாகவில்லை.
அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி!@CMOTamilnadu@mkstalin
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அன்புத்தம்பி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நகை…
ஆனால், அஜித்குமார் custodial death பற்றி சீமான் தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ கணக்கில் பதிவிட்டுள்ள பதிவைக் காணமுடிந்தது. அதில், "முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே அஜித்குமாரை கைது செய்து தாக்கியது, இரும்பு கம்பி, மிளகாய் பொடி ஆகியவற்றைக் கொண்டு சித்ரவதை செய்தது, இதுவரை நடந்த 24 லாக்கப் மரணங்களுக்கு எந்த நடவடிக்கைகயும் எடுக்கப்படாமல் இருப்பது" ஆகியவை குறித்து திமுக அரசை விமர்சனம் செய்யும் வகையில் தான் எழுதப்பட்டிருக்கிறது. திமுக அரசு இந்த சம்பவத்தை சரியாக கையாண்டதாக அதில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் News Card போலியாக Edit செய்து உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. மேலும், அஜித்குமாரின் லாக்கப் மரணம் குறித்து திமுக அரசை விமர்சனம் செய்து சீமான் பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முடிவு:
அஜித்குமாரின் லாக்கப் மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக அரசிற்கு சாதகமாக பேசியது போன்று போலியாக Edit செய்து உருவாக்கப்பட்ட News Card-ஐ சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பப்படுகிறது.