YouTurn

கேரளாவில் பாலை ஹலால் ஆக்க முஸ்லீம் இளைஞன் செய்யும் செயலைப் பாருங்கள் எனப் பரவும் வதந்தி.

கேரளாவில் பாலை ஹலால் ஆக்க முஸ்லீம் இளைஞன் செய்யும் செயலைப் பாருங்கள் எனப் பரவும் வதந்தி.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இதைப்போன்ற நபர்களால் தான் இஸ்லாமிய சமூகம் அசிங்கப்படுகிறது. பால் ஹலால் ஆக வேண்டும் என பால்டப்பில் இறங்கி குளிக்கிறான். இவனையெல்லாம் என்ன செய்ய கேரளா வகாபிகளின் பிடியில்..



X Link:

விரிவான விளக்கம்

"கேராளாவில் பாலை ஹலாலாக மாற்ற முஸ்லீம் இளைஞன் செய்த செயலைப் பாருங்கள், கேரளா வகாபிகளின் பிடியில் சென்று விட்டது" என்று கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

மேலும் அந்த வீடியோவில், பால் போன்று வெள்ளை நிற திரவம் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தொட்டியின் உள்ளே அமர்ந்துள்ள ஒரு நபர், ஒரு சிறிய டப்பாவின் மூலம் பாலை எடுத்து தன்னுடைய தலையில் தொடர்ந்து ஊற்றுவதைக் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில் இந்த வீடியோ கேரளாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

ND TV பக்கத்தில் நவம்பர் 09, 2020 அன்று "பால் ஆலையில் பாலில் குளித்த தொழிலாளி, வீடியோ வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்டார்" என்ற தலைப்பில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், "துருக்கியின் மத்திய அனடோலியன் மாகாணமான கொன்யாவில் உள்ள ஒரு பால் ஆலையில் தொழிலாளி ஒருவர் பாலில் மூழ்கும் காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்த நிலையில், அந்த  பால் ஆலை மூடப்பட்டது

மேலும் அந்த வீடியோவில் உள்ள நபர் எம்ரே சாயர் என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவரது வீடியோவை உகுர் துர்குட் டிக்டோக்கில் பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதே போன்று India Today ஊடகத்திலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "துருக்கியில் பால் ஆலை தொழிலாளி ஒருவர் பால் தொட்டியில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் TikTok இல் பகிரப்பட்ட இந்த சிறிய கிளிப் இப்போது Twitter இல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் எம்ரே சாயர், தான் பாலில் குளிக்கவில்லை, மாறாக அது தண்ணீரும், தொட்டியை துப்புரவு செய்ய பயன்படுத்தும் பொருட்களும் சேர்ந்த கலவை என்று கூறினார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



மேலும் The Indian Express, Times Now, India Times மற்றும் Business Today போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கேரளாவில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு இந்துக்களிடம் பணம் பறிப்பு எனப் பரவும் போலி வீடியோ !

மேலும் படிக்க: இந்தியா மற்றும் கேரளாவில் நாள் ஒன்றுக்கு அதிக அளவில் முஸ்லிம் குழந்தைகள் பிறப்பதாகப் பரவும் பொய் !

முடிவு:

நம் தேடலில், கேராளாவில் பாலை ஹலாலாக மாற்ற முஸ்லீம் இளைஞன் செய்த செயலைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் வீடியோ, துருக்கியில் கடந்த 2020 இல் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க