YouTurn

‘ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துவிட்டது’ எனப் பரவும் ராணுவ வீரரின் போலி வீடியோ!

‘ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துவிட்டது’ எனப் பரவும் ராணுவ வீரரின் போலி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘ANI’ ஊடகப் பக்கத்தில் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்பட்ட உண்மையான வீடியோவை, AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். பரவி வரும் வீடியோ போலியானது என்று ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு அமைப்பும் (PIB) உறுதி செய்துள்ளது.

பரவிய செய்தி

இந்த காணொளியில் பேசுபவர் இந்திய ராணுவத்தின் JCO ( Junior Commissioned Officer) அனுராக் தாக்கூர். இவர் தனது ராஜினாமாவை பொது வெளியில் அறிவித்துள்ளார். அவர் அப்படி ராஜினாமா செய்ய என்ன காரணம் ..? அவர் மனம் நொந்து சொல்கிறார்! "எங்களது உயிருக்கு இப்போது ஆர்மியில் எந்த மதிப்போ மரியாதையோ இல்லை! ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது என் உடன் பணியாற்றிய 300 ஜவான்ஸ் கொல்லப்பட்டனர்! இந்திய அரசு அதை மூடி மறைத்து விட்டது! அவர்களது வீரதீர மரணத்தைப் பாராட்டி, இந்திய அரசு எந்தவொரு விருதோ, நிதியோ வழங்கவில்லை!"



Facebook Link | Archive Link 

விரிவான விளக்கம்

2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (PoJK) உள்ள 9 பயங்கரவாத உள்கட்டமைப்புத் தளங்களைக் குறிவைத்து இந்தியா, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. 


இந்நிலையில், 'ஆபரேஷன் சிந்தூரில்' 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மூடி மறைத்துவிட்டது என்று இந்திய ராணுவத்தின் JCO ( Junior Commissioned Officer) அனுராக் தாக்கூர் கூறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் வீடியோவில் ‘ANI’ ஊடகத்தின் லோகோவும் இடம்பெற்றுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது. 




உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோ குறித்து “ANI” ஊடகப் பக்கத்தில் முதலில் ஆய்வு செய்தோம். ஏப்ரல் 22, 2026 அன்று வைரலாகும் இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் காணப்பட்ட ராணுவ அதிகாரி, ஆபரேசன் சிந்தூரில் அவரது குழுவினருடன் சேர்ந்து எதிரி நாட்டினர் அனுப்பிய டிரோன்களை சுட்டு வீழ்த்தி, நாட்டின் முக்கிய தளங்களை பாதுகாத்ததாகவே தெரிவித்திருந்தார். ஆனால் பரவி வரும் வீடியோவில் ராணுவ வீரர், “ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மூடி மறைத்துவிட்டது” என்று கூறுவதை காண முடிகிறது. 


#WATCH | Bhuj, Gujarat: A JCO of Army Air Defence says, "On the morning of 7th May (in 2025), we came to know that the armed forces of the country have destroyed the adversary's terrorist hideouts. With that, Operation Sindoor began. I inspired all the jawans of our section and… pic.twitter.com/P4ryVa6fHL

— ANI (@ANI) April 22, 2026


எனவே வீடியோ AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டிக்கலாம் என்ற சந்தேகம் எழவே, பரவி வரும் வீடியோவை “Hive Moderation” இணையதளப் பக்கத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்பதை உறுதி செய்யமுடிந்தது.  



மேலும், "பரவி வரும் வீடியோ போலியாக எடிட் செய்யப்பட்டது" என மறுப்பு தெரிவித்து, ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு அமைப்பும் (PIB) ஏப்ரல் 23, 2026 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. 



முடிவு: 


நம் தேடலில், 'ஆபரேஷன் சிந்தூரில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதை ஒன்றிய அரசு மூடி மறைத்துவிட்டது. என்று இந்திய ராணுவ அதிகாரி கூறியதாகப் பரப்பப்படும் வீடியோ உண்மையானதல்ல. ‘ANI’ ஊடகப் பக்கத்தில் ஏப்ரல் 22 அன்று வெளியிடப்பட்ட உண்மையான வீடியோவை, AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க