YouTurn

திருப்பரங்குன்றம் தர்காவில் தீபம் ஏற்றுவதை தடை செய்யும் மசோதா பற்றி பேசினாரா திமுக வேட்பாளர்?

திருப்பரங்குன்றம் தர்காவில் தீபம் ஏற்றுவதை தடை செய்யும் மசோதா பற்றி பேசினாரா திமுக வேட்பாளர்?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது Edit செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட போலியான News Card ஆகும். திமுக வேட்பாளர் அவ்வாறு எதுவும் சொல்லவில்லை.

பரவிய செய்தி

முருக பக்தர்களுக்கு சவால் விடும் திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் 

கலவரத்தை தூண்ட முயற்சி!

தமிழர்களே! ஹிந்துக்களே! முருக பக்தர்களே! வெற்றிவேல்! வீரவேல்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம், திமுக அவை தோற்கடிப்போம்!



X Link / Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகின்றன ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடுகளை முடித்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.


இந்நிலையில், ’மீண்டும் திமுக தலைமையிலான அரசு அமைந்தால், திருப்பரங்குன்றம் தர்கா மாண்பை பேணிகாக்கும் விதமாக தீபம் ஏற்றுவதை தடைசெய்யும் விதமான சட்ட மசோதா கொண்டுவரப்படும்’ என்று கிருத்திகா தங்கப்பாண்டி வாக்குறுதி கொடுத்ததாக குறிப்பிடும் ’News 7’ ஊடகத்தின் News Card ஒன்றை ’இந்து மக்கள் கட்சி’யின் தலைவர் அர்ஜூன் சம்பத் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.



உண்மை என்ன? 


பரப்பப்படும் News Card-ஐ Reverse Image search மூலமாக இணையத்தில் தேடிய போது, மார்ச் 28ஆம் தேதி ’News 7 தமிழ்’ ஊடகம் வெளியிட்டுள்ள News Card ஒன்றைக் காணமுடிந்தது. 



அதில், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் வேட்பாளராக கிருத்திகா தங்கப்பாண்டியை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த உண்மையான News Card-ஐ Edit செய்து, திருப்பரங்குன்றம் தர்ஹாவில் தீபம் ஏற்றுவதை தடைசெய்யும் விதமான சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்று கிருத்திகா தங்கப்பாண்டி வாக்குறுதி கொடுத்ததாக போலியான News Card-ஐ உருவாக்கி பரப்பிவருகிறார்கள். 


முடிவு:


உண்மையான News Card-ஐ Edit செய்து உருவாக்கப்பட்ட போலியான News Card-ஐ சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க