YouTurn

ஸ்டாலின் குறித்து அட்டைப்பட கேலிச் சித்திரம் வெளியிட்டதா ஜூனியர் விகடன்? உண்மை என்ன?

ஸ்டாலின் குறித்து அட்டைப்பட கேலிச் சித்திரம் வெளியிட்டதா ஜூனியர் விகடன்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்த பழைய கேலி சித்திரப்படத்தை Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட படம் இது.

பரவிய செய்தி

திமுக கொத்தடிமைகளா!!!
ஜூனியர் விகடனுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை ஒழுங்கா போட சொல்லுங்கடா ..
வச்சு சிதைச்சி இருக்கான் விகடன்


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

ஜூனியர் விகடன் இதழ் ஒன்றின் அட்டைப்படத்தில், முதல்வர் ஸ்டாலின் ஆகாயத்திலிருந்து விழுவது போன்றும் அருகில் காற்று போன பலூன் ஒன்றும் பறப்பது போன்றும் ஒரு கேலிச் சித்திரப்படம் இடம்பெற்றிருக்கிறது. அதாவது ஸ்டாலின் பற்றி ஊதி பெருக்கப்பட்ட பிம்பம் உடைந்துவிட்டதாக பொருள்படும் இந்த அட்டைபடத்தை சமீபத்தில் ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளதாக பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த அட்டைப்படத்தில் 07/09/2022 என்று தேதி குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். மேலும் அதில் ’Volume 40 Issue 72’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.



இதனை அடிப்படையாக கொண்டு ஜூனியர் விகடன் பழைய இதழ்களை தேடியபோது, ஜூனியர் விகடன் இதழின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள அட்டைப்படத்தை காணமுடிகிறது. அதில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதி, இதழ் எண் (Volume 40 Issue 72) எல்லாம் ஒன்றாகவே இருப்பதைக் காண்கிறோம்.



ஆனால் அந்த அட்டைப்படத்தில் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்த கேலி சித்திரப்படம் தான் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அதில் ஜூனியர் விகடன் அண்ணமைலையை 'Tag' செய்திருப்பதையும் காணமுடிகிறது. இவ்வாறு அண்ணாமலை குறித்து ஜுனியர் விகடன் வெளியிட்டிருந்த பழைய கேலி சித்திரத்தை போலியாக Edit செய்து ஸ்டாலின் பற்றி சமீபத்தில் வெளியிடப்பட்ட கேலி சித்திரம் போல் மாற்றியுள்ளனர்.


முடிவு:


தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து ஜுனியர் விகடன் வெளியிட்டிருந்த பழைய அட்டைப்பட கேலி சித்திரத்தை போலியாக Edit செய்து, சமீபத்தில் ஸ்டாலின் குறித்து ஜுனியர் விகடன் அட்டைப்படம் வெளியிட்டதாக தவறாக பரப்பிவருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க