YouTurn

Detergent Powder-ன் நுரையை பயன்படுத்தி கோழிகள் வெள்ளையாக்கப்படுகிறதா? உண்மை என்ன?

Detergent Powder-ன் நுரையை பயன்படுத்தி கோழிகள் வெள்ளையாக்கப்படுகிறதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது வைரஸ் பாதித்த இறைச்சிப் பறவைகளை பெரும் எண்ணிக்கையில் கொல்லும் "Foam Depopulation" முறையாகும்.

பரவிய செய்தி

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா.?


image.png


X Link


விரிவான விளக்கம்

பண்ணையில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் மீது நுரை பரப்பப்படும் வீடியோவை பதிவிட்டு, ‘அழுக்காக இருக்கும் கோழிகளை வெள்ளையாக மாற்றி விற்பனை செய்வதற்காக ‘Detergent’ மூலம் உருவாக்கப்படும் நுரையைக் கொண்டு சுத்தப்படுத்துகிறார்கள். இப்படி நுரை மூலம் சுத்தம் செய்யப்பட்ட கோழியின் இறைச்சியை நாம் உண்ணும் போது பாதிப்புகள் வர வாய்ப்பிருக்கிறது’ என்று சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1868590495263572290


உண்மை என்ன:


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’the save movement’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்ததைக் காணக் கிடைத்தது. அந்தப் பதிவில், ”இறைச்சிப் பண்ணை முழுவதும் நுரையை பரப்பும் இந்த நிகழ்முறைக்கு "Foam Depopulation" என்று பெயர். இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவைகள் 'Avian Flu' வைரஸால் பாதிக்கப்படும் போது, இப்படி நுரையை பரப்புவதால் பறவைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


image.png


இது குறித்து மேலும் தேடியதில், இறைச்சிப் பண்ணையில் நுரையை பரப்புவதன் மூலமாக பெரிய எண்ணிக்கையிலான பறவைகளை குறைந்த நேரத்தில் கொல்லும் புதிய யுத்தி  2004ஆம் ஆண்டு ’டெலாவேர் பல்கலைக்கழகத்தில்’ ஆரம்ப கட்டத்தில் இருந்ததாக குறிப்பிடும் செய்தியை ‘Poultry World’ என்ற இணையதளத்தில் காணமுடிந்தது. வான்கோழிகளுக்கு  Avian Influenza (AI) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவை மேற்கூறிய முறையில் அழிக்கப்படவிருப்பதாக குறிப்பிடும் இந்த செய்தியை POULTRY WORLD 2007ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது.


image.png


மேலும், அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் இப்படி வைரஸ் பாதித்த இறைச்சிப் பறவைகளை நுரையை பரப்பி அழிக்கும் "Foam Depopulation" முறை  அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கிறது என்பதை CBS NEWS செய்தியின் மூலம் அறியமுடிகிறது.


இதிலிருந்து, பரவக் கூடிய வீடியோ வைரஸ் பாதித்த இறைச்சிப் பறவைகளை பெரும் எண்ணிக்கையில் கொல்லும் "Foam Depopulation" என்பதை அறிய முடிகிறது. ஆனால், இதனை Detergent முலம் சுத்தம் செய்து கோழிகளை சந்தைக்கு அனுப்பும் நடைமுறை என வதந்தி பரப்புகின்றனர்.


முடிவு:


இந்த வீடியோவில் இருப்பது,  Avian Flu வைரஸால் பாதிக்கப்பட்ட இறைச்சிப் பறவைகளை நுரையைப் பரப்பி கொல்லும் "Foam Depopulation" முறையாகும். இதனை, ‘Detergent’ நுரையைக் கொண்டு அழுக்கான பறவைகள் சுத்தம் செய்யப்படும் நடைமுறை என வதந்தி பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க