YouTurn

கோவையில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு என்று பரப்பப்படும் CCTV காட்சி! உண்மை என்ன?

கோவையில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு என்று பரப்பப்படும் CCTV காட்சி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த சம்பவம் கடந்த 2023ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் ஷீரடி என்ற ஊரில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றதாகும்.

பரவிய செய்தி

*நேற்று கோவை  சாய்பாபா கோயில்* கேட் 2 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில் ஒருவித கெமிக்கல் பொடியை தூவியவுடன் கார் கண்ணாடி சத்தமில்லாமல் உடைகிறது. பிறகு காருக்கு உள்ளே உள்ள  பேக்கை திருடி செல்கிறான். எச்சரிக்கை பதிவு காரில் *விலையுயர்ந்த பொருட்களை வைத்துவிட்டு செல்லாதீர்கள்*.


image.png


X Link

விரிவான விளக்கம்

ஒரு நபர் பார்க்கிங்-ல் நிறுத்தப்பட்டிருக்கும் கார் கண்ணாடியை உடைத்து, காரில் உள்ள பையத் திருடிச் செல்லும் CCTV காட்சியை பதிவிட்டு, ‘இந்த திருடன் கெமிக்கல் பொடியைத் தூவி கார் கண்ணாடியை சத்தமில்லாமல் உடைத்ததாகவும், இந்த சம்பவம் சமீபத்தில் கோவையில் உள்ள  சாய்பாபா கோவிலில் நடந்ததாகவும்’ சமூக வலைதளமான ‘எக்ஸ்’-ல் பரப்பப்படுகிறது. 

https://x.com/i/web/status/1882116848545943830

உண்மை என்ன:

பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடியதில், ‘SP 24 TAAS’ என்ற யூட்யூப் தளத்தில் இந்த வீடியோ காணக்கிடைக்கிறது. இந்த வீடியோ இந்த யூட்யூப் தளத்தில் 2023 அக்டோபர் 2ஆம் தேதி, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள  ஷீரடி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலின் VIP வாயில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து திருட்டு நடைபெற்றதாகவும் இந்த யூட்யூப் வீடியோவின் Description-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்த வீடியோவை கவனமாக உன்னிப்பாக பார்க்கும்போது, அந்த நபர் கெமிக்கல் பொடி எதையும் தூவுவதாக தெரியவில்லை. மாறாக, அந்த நபர் கவன் போன்ற பொருளைக் கொண்டு கண்ணாடியை உடைப்பதை பார்க்க முடிகிறது.

மேற்கூறிய விவரங்களில் இருந்து, இந்த சம்பவம் மகாராஷ்ட்ர மாநில அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் நடந்திருப்பது தெளிவாகிறது.

முடிவு:

கடந்த 2023ஆம் ஆண்டு மகாராஷ்ட்ர மாநிலம் ஷீரடி  சாய்பாபா கோவிலில் நடந்த சம்பவத்தை தற்போது (2025 ஜனவரி 21 அன்று) நடந்ததாக தவறாக பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.