YouTurn

செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கப்படாதா? உண்மை என்ன?

செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கப்படாதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் ₹500 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பொதுமக்களுக்கு அதிகமாக வழங்குவதை உறுதி செய்யவே ரிசர்வ் வங்கி ஏப்ரல் 28 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

செப்டம்பர் - 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கபடாது. 100, 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு. அடுத்த புதிய இந்தியா பொறக்க போகுது.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கப்படாது. 100, 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகக் கூறி செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது குறித்து ஆய்வு செய்தோம். 


வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் ₹500 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், 100 அல்லது 200 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பொதுமக்களுக்கு அதிகமாக வழங்குவதை உறுதி செய்யவே ரிசர்வ் வங்கி ஏப்ரல் 28 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது



அந்த அறிவிப்பில், “அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அணுகுவதை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து வங்கிகளும், வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் (WLAOs) தங்கள் ஏடிஎம்கள் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டு அதற்கான காலக்கெடுவதையும் அறிவித்துள்ளது.


அதன்படி "செப்டம்பர் 30, 2025க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டில் ((பணம் வைக்கும் பெட்டி) இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும். மார்ச் 31, 2026க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டில் (பணம் வைக்கும் பெட்டி) இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும்” என்றும் அறிவித்துள்ளது.


இதனை, “Economic Times“ வெளியிட்டுள்ள செய்தியிலும் உறுதிபடுத்த முடிகிறது. 



இந்நிலையில், RBI-இன் இந்த அறிவிப்பை பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.


முடிவு: 


நம் தேடலில், செப்டம்பர் - 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கப்படாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க