YouTurn

தவெக ஆட்சி அமைத்ததும் தஞ்சை பெரிய கோவிலின் அகழி தூய்மை செய்யப்பட்டதா?

தவெக ஆட்சி அமைத்ததும் தஞ்சை பெரிய கோவிலின் அகழி தூய்மை செய்யப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

தவெக ஆட்சி அமைத்ததும், தஞ்சை பெரிய கோவிலில், இத்தனை ஆண்டுகளாக புதர் அதிகமாக வளர்ந்து குப்பை கூடமாக இருந்த அகழி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.

பரவிய செய்தி

தஞ்சாவூர் எம்எல்ஏ.. பழைய தமிழ் பெருமையை தூசி தட்டி கிளப்புறாப்ல.. 



X Link | Archive Link


விரிவான விளக்கம்

தவெக ஆட்சி அமைத்ததும், தஞ்சை பெரிய கோவிலில், இத்தனை ஆண்டுகளாக புதர் அதிகமாக வளர்ந்து குப்பை கூடமாக இருந்த அகழி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில் தஞ்சை பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழி கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Thanjavur_Mapla (@thanjavur_mapla)


உண்மை என்ன?


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தஞ்சை பெரிய கோயிலின் பூஜை உள்ளிட்ட பணிகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து வருகின்றன. கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோயிலின் முன் பகுதியில் உள்ள அகழியில் சீமை கருவேல மரங்கள் மண்டி காணப்பட்டநிலையில், இந்திய தொல்லியல் துறையினர் தாங்களே அந்த பணிகளை செய்வதாகவும், நிதியை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தமிழ்நாடு அரசிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ரூபாய் 4.88 கோடி நிதியை இந்திய தொல்லியல் துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கியது. வழங்கி 3 ஆண்டுகளாகியும் (கடந்த 2023 ஆம் ஆண்டில்) அகழி மேம்பாட்டு பணிகளை இந்திய தொல்லியல் துறையினர் தொடங்கவில்லை என்பதை கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது.  



இந்நிலையில் தற்போது தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், “தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி மே 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது.  இதுவரை பெரிய கோவிலின் பின்புறம் சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு அகழி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 3.5 கோடியில் ஏழு புதிய அதிநவீன ஜே.சி.பி இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில் தற்போது தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணி மே 16 ஆம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2026 மே 10 அன்று தான் தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில்,  தவெக ஆட்சி அமைத்ததும், தஞ்சை பெரிய கோவிலில், இத்தனை ஆண்டுகளாக புதர் அதிகமாக வளர்ந்து குப்பை கூடமாக இருந்த அகழி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது. 



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க