YouTurn

இறந்தவர்களுக்கு இரவே பிணக்கூராய்வு செய்யப்பட்டதா? கரூர் கூட்ட நெரிசல் மீண்டும் மீண்டும் பரவும் வதந்தி!

இறந்தவர்களுக்கு இரவே பிணக்கூராய்வு செய்யப்பட்டதா? கரூர் கூட்ட நெரிசல் மீண்டும் மீண்டும் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 40 பேரின் உடல்களும் நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கே தகனம் செய்யப்பட்டது என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை.

பரவிய செய்தி

காலை 4 மணிக்கே தகனம் செய்யப்பட்டதா??? 😳 இந்த குற்றச்சாட்டு உண்மையானது என்றால், இது ஹத்ரஸ் சம்பவத்தைப் போலவே இருக்கிறது… அதிர்ச்சிகரமான சம்பவம் இது. மேலும், நீதிபதி “உடற்கூறு (post-mortem) பணியை Forensic Medicine Department மருத்துவர்கள்தானா செய்தார்களா?” என்று கேட்டுள்ளார். (எல்லா மருத்துவர்களும் உடற்கூறு செய்ய தகுதியானவர்கள் அல்ல.) இது மாநில அரசுக்கு எதிராக நான் நினைத்ததைவிடவும் மோசமாகத் தோன்றுகிறது. உண்மையை வெளிக்கொணர சிபிஐ விசாரணை அவசியமாகி வரும் நிலை உள்ளது.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். எனவே இந்த வழக்கை விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தவெக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன.


இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 40 பேரின் உடல்களும் நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கே தகனம் செய்யப்பட்டது. இதில் சட்டப்படி முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி அரசியல் விமர்சகர் சுமந்த் உட்பட தவெகவினர் பலரும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். 



உண்மை என்ன? 


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணை குறித்து ஆய்வு செய்ததில், வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியுடன் இரவில் பிரேதப் பரிசோதனை நடத்தலாம், இது வழக்கமான ஒன்றுதான் என்று கூறியிருப்பதையும், உடற்கூராய்வுக்கு எத்தனை மேசைகள் இருந்தன, மருத்துவக் கட்டமைப்பு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவும் அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளதையும் அறிய முடிந்தது. 


இதைத் தொடர்ந்து, இறந்த 40 பேரின் உடல்களும் நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கே தகனம் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். இறந்தவர்களுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வு குறித்து ஊடக சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் விளக்கம் அளிக்கையில், “கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 220 மருத்துவர்கள் மற்றும் 165 செவிலியர்கள் உள்ளனர். மேலும் சேலத்தில் நடந்த  பொது சுகாதார மாநாட்டில் இருந்தும் மருத்துவர்கள் சென்றனர். முக்கியமான சூழ்நிலைகளில் ஆட்சியரின் அனுமதியுடன் இரவில் உடற்கூராய்வு செய்யலாம். 

இந்த தகவல் வந்தவுடனேயே அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து 114 மருத்துவர்கள், 23 சிறப்பு செவிலியர்கள், 16 தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.


மேலும் திருச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் அங்கிருந்தும் மருத்துவர்கள் கரூருக்கு வந்தனர். ஒவ்வொரு பிரேத பரிசோதனைக்கும் குறிப்பிட்ட நேரம் ஒன்று இருக்கிறது. இரவு 2 மணிக்கு ஆரம்பித்தால் கூட 40 சடலங்களுக்கு மாலை 4 மணிக்கு மேல் ஆகி விடும். தாமதமாக ஆரம்பித்தால் இன்னும் திங்கள் கிழமை போகும். ஆகையால், தாமதம் செய்யாமல் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது” என்று கூறியிருப்பதைக் காண முடிந்தது.



மேலும் 40 உடல்களுக்கும் நள்ளிரவிலேயே உடற்கூராய்வு முடிந்து தகனம் செய்ததாக கூறுவது தவறான தகவல். கடந்த செப்டம்பர் 28ம் தேதி அதிகாலை கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், 14 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்து இருக்கிறார். மற்ற உடல்களுக்கு உடல்கூராய்வு முடிந்ததும் அவர்களது உடல்களும் ஒப்படைப்படும் என்றே கூறியுள்ளார். 



மேலும் ‘Jaya Plus” ஊடகம், “காலை 7 மணிக்கு உடற்கூராய்வு செய்வதாகக் கூறிய நிலையில், "12 மணி ஆகியும் செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு” என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 28 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதன் மூலம், அடுத்த நாள் செப்டம்பர் 28ம் தேதி மதியம் 12 மணி அளவில் உடற்கூராய்வு பணிகள் முடிக்கப்படாமல் இருந்துள்ளது என்பதை, ஊடகத்தில் பதிவாகியுள்ள செய்திகளின் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by JayaPlusChannel (@jayaplusnews)


இதையடுத்து, செப்டம்பர் 28 அன்று மாலை அனைத்து உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 40 பேரின் உடல்களும்  நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கே தகனம் செய்யப்பட்டது என்று கூறி பலரும் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 


இதற்கு முன்பும், மாலை 6 மணிக்கு மேல் பிணக்கூராய்வு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பினர். அப்போதே இது குறித்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம். 


மேலும் படிக்க: மாலை 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று பரவும் செய்தி!


முடிவு: 


நம் தேடலில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 40 பேரின் உடல்களும் நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு அதிகாலை 4 மணிக்கே தகனம் செய்யப்பட்டது என்று பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.