YouTurn

இந்தியத் தேசிய கீதம்தான் உலகில் சிறந்தது என யுனெஸ்கோ சொன்னதாகப் பரவும் பல ஆண்டுக்கால பொய்!

இந்தியத் தேசிய கீதம்தான் உலகில் சிறந்தது என யுனெஸ்கோ சொன்னதாகப் பரவும் பல ஆண்டுக்கால பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகில் உள்ள தேசிய கீதங்களிலேயே இந்தியாவினுடையது தான் சிறந்தது என யுனெஸ்கோ அறிவித்துள்ளதாகப் பரவும் தகவல் பொய் என யுனெஸ்கோ தரப்பு விளக்கம்.

பரவிய செய்தி

நமது தேசிய கீதமான "ஜன கண மன... " யுனெஸ்கோவால் "உலகின் சிறந்த கீதமாக" அறிவிக்கப்பட்டுள்ளது.  சில நிமிடங்களுக்கு முன்பு. தயவுசெய்து இதை பகிரவும்.இந்தியனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

indian national anthem unesco

விரிவான விளக்கம்

இந்தியாவின் தேசிய கீதத்தை உலகின் சிறந்த தேசிய கீதமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது என வாட்சப்பில் தகவல் ஒன்று பரப்பப்படுகிறது. மேலும் அப்பதிவில் தேசிய கீதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தம் என ஒரு நீண்ட பட்டியலும் உள்ளது. 

உண்மை என்ன?

பரவக் கூடிய செய்தி பற்றி 2008ம் ஆண்டு ‘India Today’ என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதே தகவல் 2008ம் ஆண்டும் பரவியுள்ளது. அப்போதே இது தொடர்பாக இந்தியா டுடே யுனெஸ்கோவிற்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டுள்ளது. 

image.png

இப்படிப் பரவக் கூடிய தகவல் தவறானது என்றும் யுனெஸ்கோ இந்தியாவிற்கு மட்டுமின்றி வேறு எந்த நாட்டின் தேசிய கீதத்திற்கும் இப்படியான அங்கிகாரம் எதுவும் வழங்கவில்லை என்றும் யுனெஸ்கோவின் அப்போதைய செய்தி தொடர்பாளர் Sue Williams என்பவர் தெரிவித்துள்ளார். 

https://x.com/i/web/status/803868889121591296

இந்தியா டுடே செய்தி வெளியிட்ட பிறகும் 2016, 2019 என அவ்வப்போது இந்த பொய் செய்தி பரப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் வாட்சப்பில் பரப்பப்படுகிறது. Sue Williams அளித்த விளக்கத்தின் அடிப்படையில் இந்தியாவின் தேசிய கீதம் சிறந்தது என யுனெஸ்கோ அங்கிகாரம் அளித்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.

https://x.com/i/web/status/1162645312709644288

முடிவு:

இந்தியாவின் தேசிய கீதத்தை உலகின் சிறந்த தேசிய கீதமென யுனெஸ்கோ அறிவித்துள்ளது எனப் பரவக் கூடிய தகவல் தவறானது. இந்தியாவிற்கு மட்டுமின்றி வேறு எந்த நாட்டுத் தேசிய கீதத்திற்கும் யுனெஸ்கோ இப்படி அங்கிகாரம் அளித்தது கிடையாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.