YouTurn

கேதார்நாத்தில் நடந்ததாகப் தவறாகப் பரப்பப்படும் பரவும் ஜப்பான் நிலச்சரிவு வீடியோ!

கேதார்நாத்தில் நடந்ததாகப் தவறாகப் பரப்பப்படும் பரவும் ஜப்பான் நிலச்சரிவு வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கேதார்நாத்தில் நடந்த நிலச்சரிவுக்கு ஏன் எச்சரிக்கை விடுத்து அமித்ஷா காப்பாற்றவில்லை என்ற கேள்வியோடு பரவும் வீடியோ உண்மையில் ஜப்பானில் நடந்த நிலச்சரிவு சம்பவம்.

பரவிய செய்தி

இப்படி நடக்கும் என்று யாரும் எச்சரிக்கை செய்யவில்லையா?

கேரளாவில்
எச்சரிக்கை செய்ய முடிந்த அமித் ஷாவால் இதை காப்பாற்ற முடியவில்லையா?



விரிவான விளக்கம்

கேரளம் மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 நபர்களுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 7வது நாளாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேதார்நாத்தில் நிலச்சரி என்று கூறி 0:12 வினாடிகள் கொண்ட  வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கங்களில்  வைரலாகப் பரவி வருகின்றது.

கேதார்நாத்
இப்படி நடக்கும் என்று யாரும் எச்சரிக்கை செய்யவில்லையா?

கேரளாவில்
எச்சரிக்கை செய்ய முடிந்த அமித் ஷாவால் இதை காப்பாற்ற முடியவில்லையா? pic.twitter.com/1g99y36yFX

— ETHI SUNDAR🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) August 2, 2024

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், அது கேதார்நாத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறியமுடிந்தது.

பரவக்கூடிய இதே வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி அன்று The Sun என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவின் தலைப்பு "அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஜப்பான் அட்டாமியில் பயங்கரமான நிலச்சரிவு" எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மேலும் அந்தப் பதிவின் விளக்கத்தில், "இந்த நிலச்சரிவில் 20 நபர்கள் காணவில்லை எனவும், இருவர் உயிரிழந்துள்ளனர்" எனவும் இருந்தது.



மேலும், தேடியதில் இதே தகவல் இந்துஸ்தான் டைம், Republic World, போன்ற செய்தி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது என்பதை அறியமுடிந்தது.



எனவே இந்தச் சம்பவம் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் (Atami ) பகுதியில் நடந்த நிலச்சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. 

முடிவு:

நம் தேடலில், கேதார்நாத்தில் நடந்த நிலச்சரிவு எனப் பரவும் வீடியோ தகவல் உண்மையானது அல்ல. இந்த நிலச்சரிவு ஜப்பானில் உள்ள அட்டாமியில் நடந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க