யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வீடியோவில், யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுப்பதையே காண முடிகிறது. இதை திமுகவினர் மிரட்டியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
“NEWS TN“ பக்கத்தைச் சேர்ந்த யூடியூபருக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்த போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் யூடியூபர் ஒருவருக்கு தோடர்ந்து போனில் மிரட்டல் அழைப்புகள் வருவதைக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்ததில், இதன் உண்மையான வீடியோ “NEWS TN “ என்ற யூடியூப் பக்கத்தில் “சாதாரண விமர்சனத்தை கூட தாங்க முடியாத தொண்டர்கள் | Seeman | Vijay | Anbumani | Premalatha“ என்ற தலைப்பில், கடந்த மே 18 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
வீடியோவில், யூடியூபருக்கு பாமகவினர் ஒவ்வொருவராக மிரட்டல் விடுப்பதைக் காண முடிகிறது. இதை திமுகவினர் மிரட்டியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் இதே போன்று, நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுக்கும் மற்றொரு வீடியோவையும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளதையும் காண முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், “NEWS TN“ பக்கத்தைச் சேர்ந்த யூடியூபருக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்த போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.