YouTurn

Lord Alfred Tennyson கவிதை வரிகளை, வில்லியம் பிளேக்கின் வரிகள் என தவறாக கூறிய தவெக தலைவர் விஜய்.

Lord Alfred Tennyson கவிதை வரிகளை, வில்லியம் பிளேக்கின் வரிகள் என தவறாக கூறிய தவெக தலைவர் விஜய்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

Lord Alfred Tennyson எழுதிய THE BROOK என்ற கவிதையில் இடம்பெற்றுள்ள Men may come and men may go, but I go on forever என்ற வரிகள்.

பரவிய செய்தி

Men may come and men may go, but I go on forever என்ற வில்லியம் பிளேக்கின் சில வரிகளுடன் எனது உரையை முடிப்பதாக விஜய் கூறினார்.


விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தவெக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் நிறைவுரையாற்றினார். அவர் தனது உரையின் தொடக்கத்தில் திமுகவையும், திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார். உரையை முடிக்கும் முன்பு ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனைத் தொடர்ந்து உரையின் முடிவில், "Men may come and Men may go, But I go on forever" என்ற ஆங்கில கவிதையைக் குறிப்பிட்டு, இதை வில்லியம் பிளேக் எழுதியதாக கூறினார்.

உண்மை என்ன ? 

விஜய் குறிப்பிட்ட அந்த கவிதை வரிகள் குறித்து தேடி பார்த்தோம். அது Lord Alfred Tennyson எழுதிய THE BROOK என் கவிதை என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து தேடியதில், அந்த கவிதை 9ஆம் வகுப்பு CBSE பாடப்புத்தகத்தில் THE BROOK, by Lord Alfred Tennyson என்ற பெயரில் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது. அந்த புத்தகத்தில் 6th Unit-ல், பக்கம் எண் 65ல் இந்த கவிதை இடம்பெற்றிருந்தது. அதில் விஜய் குறிப்பிட்டுள்ள வரிகள் 50வது சரணத்தில் இடம்பெற்றிருந்தது காணமுடிந்தது. இதற்கான screenshot-ஐ கீழே இணைத்துள்ளோம்.



மேலும் இதை உறுதி செய்ய Lord Alfred Tennyson உடைய கவிதை புத்தகம் கிடைக்குமா என்று தேடி பார்த்தோம். அப்போது  NIMS & KNIGHTS பதிப்பகத்தின் Alfred Tennyson எழுதிய The Song Of The Brook என்ற புத்தகத்தின் archive link கிடைத்தது. இதில் The Brook என்ற தலைப்பில் 13 பத்திகள் கொண்ட கவிதையை அவர் எழுதி உள்ளார். ஒவ்வொரு பத்தியும் நான்கு வரிகளைக் கொண்டுள்ளன. அதில் Men may come and men may go, but I go on forever என்ற வரிகளை பல இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதன் பொருள், 'யாரும் வரலாம், யாரும் போகலாம். ஆனால், நான் என்றென்றும் நிரந்தரமானவன்' என்று இயற்கை கூறுவதாகும்.



முடிவு : 

நம் தேடலில் கவிஞர் Lord Alfred Tennyson எழுதிய The Brook கவிதைகளில் இடம்பெற்றுள்ள வரிகளை, வில்லியம் பிளேக்கின் வரிகள் என்று விஜய் குறிப்பிட்டது தவறானது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க