யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் இந்த வெற்றியை தாலிபான்கள் கொண்டாடுவதாகக் கூறி 1:35 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் இந்த வெற்றியை தாலிபான்கள் கொண்டாடுவதாகக் கூறி 1:35 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவும் வீடியோவில் சிலர் துப்பாக்கிகளுடன் நடனமாடுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
#ChampionsTrophy2025pic.twitter.com/WupxOGq9Zx
#ICC Chambion 🏆 trophy INDIA 2025 வெற்றியை கொண்டாடிய தாலிபான்கள் 🔥💥💪 pic.twitter.com/C5XMzYfdzX
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இதே வீடியோ கடந்த 2022-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. எனவே சமீபத்தில் நடந்து முடிந்த ‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025’ கிரிக்கெட் தொடரின் இந்திய வெற்றியை தாலிபான்கள் கொண்டாடும் போது எடுக்கப்பட்டதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பது உறுதியாகிறது.
மேலும் இது குறித்து தேடியதில், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு பத்திரிக்கையாளர் “Iftikhar Firdous” தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த 2021-ல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “நம்பவே முடியவில்லை, ஒரு இந்திய ஊடகம், பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வாவில் நடந்த ஒரு திருமணத்தின் வைரல் வீடியோவை தவறாகக் ஒளிபரப்பு செய்கிறது. திருமணத்தில் நடனக் கலைஞர்கள் மாறுவேடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்டதை தாலிபான்கள் கொண்டாடுவது போல செய்தி தொகுப்பாளர் அவர்களைத் தவறாகக் காட்டுகிறார். இது அடுத்த கட்ட முட்டாள்தனம் ஹா ஹா “ என்று அதில் குறிப்பிட்டிருந்ததைக் காண முடிந்தது.
Unbelievable an Indian Channel is showing a viral video of a marriage in Khyber Paktunkhwa, Pakistan. Dancers in the marriage are masquerading. The anchor is showing them as Taliban celebrating the take over of Maidan in Afghanistan . This is next level bullshit lol. pic.twitter.com/TC18FRLXGd
இதே போன்று Waziristan Music ,Abdur Rehman Marwat , மற்றும் MTN World Wide போன்ற யூடியூப் பக்கங்களிலும் இது பாகிஸ்தானின் பன்னு நகரில் நடந்த ஒரு திருமண விழாவின் காணொளி என்று குறிப்பிட்டு கடந்த 2021-ல் செய்தி வெளியிட்டிருந்தனர்.
முடிவு:
நம் தேடலில், சமீபத்தில் நடந்து முடிந்த ‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025’ கிரிக்கெட் தொடரின் இந்திய வெற்றியை தாலிபான்கள் கொண்டாடுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது. இந்த காணொளி பாகிஸ்தானின் பன்னு நகரில் நடந்த ஒரு திருமண விழாவின் போது எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
