YouTurn

"ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலக இந்தியா முடிவு" என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

"ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலக இந்தியா முடிவு"  என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலக முடிவு என்று கூறி பாலிமர் செய்தி, தினத்தந்தி, தினகரன், மாலை மலர், Tamil Wire, விகடன், CricTamil மற்றும் Asia Net உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பரவிய செய்தி

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலக இந்தியா முடிவு - பாலிமர் செய்தி


X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் அணிகளை உள்ளடக்கி ஆசிய கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆடவருக்கு தனியாகவும், மகளிருக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது.


இந்தியாவில் ஆடவர் போட்டியும், இலங்கையில் மகளிருக்கான போட்டியும் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் தற்போது ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலக முடிவு என்று கூறி பாலிமர் செய்தி, தினத்தந்தி, தினகரன், மாலை மலர், Tamil Wire, விகடன், CricTamil மற்றும் Asia Net உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதலை தொடர்ந்து தான், பிசிசிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது. 



Dinakaran News Link:


Dailythanthi News Link:


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், “sportstarweb“ எக்ஸ் பக்கத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 


அதில், “பரவி வரும் செய்திகள் எந்த உண்மையும் இல்லாதவை. ஆசிய கோப்பை கிரிக்கெட் குறித்து BCCI எதையும் விவாதிக்கவில்லை. எங்களுடைய கவனம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் IPL மற்றும் அதைத் தொடர்ந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இங்கிலாந்து தொடர்கள் இரண்டிலும் தான் உள்ளது - பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


#BCCI secretary Devajit Saikia clarified that no decision has been taken regarding India's participation in tournaments affiliated with the Asian Cricket Council.@ShayanAcharya reports.

Details: https://t.co/jXhXhXO03B pic.twitter.com/yoDqIpECLP

— Sportstar (@sportstarweb) May 19, 2025


இதே போன்று, “The Week” ஊடகப் பக்கத்தில் நேற்று (மே 19) வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும் “ஆசிய கிரிக்கெட் போட்டிகள் குறித்து பிசிசிஐ வாரியம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், நிகழ்வுகளில் இருந்து விலகும் எந்த நோக்கத்தையும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) தெரிவிக்கவில்லை“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது



இதனை “ANI” வெளியிட்டுள்ள செய்தியின் மூலமும் உறுதிபடுத்த முடிந்தது. 


இதன் மூலம், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலக முடிவு என்று கூறி பாலிமர் செய்தி, தினத்தந்தி, தினகரன், மாலை மலர், Tamil Wire, விகடன், CricTamil மற்றும் Asia Net உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 


முடிவு: 


நம் தேடலில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்தியா விலக முடிவு என்று கூறி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதையும், ஆசிய கோப்பைகளில் இந்தியா பங்கேற்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்த முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க